பக்கம்:உத்தரகாண்டம்.pdf/313

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ராஜம்கிருஷ்ணன்   ✲    311
 

சிதிலங்கள். ஓட்டலுக்குள் இரண்டு போலீசுக்காரர் செல்கின்றனர்.

கண்ண மங்கலம் திரும்பும் வழியில் ஈகாக்கை இல்லை. இவர்கள் நடக்கிறார்கள்.


31

ண்ணமங்கலம் கிராமம் என்பது பெரிதில்லை. காலையில் இருந்து உள்ளே வந்து ஊத்தங்கரையோடு சென்று, பிறகு பெரிய சாலையில் பேருந்துகள் செல்லும். அதுவும் முன்பு கிடையாது. இந்தத்தடம் வந்த பிறகு அவள் ஒரே ஒரு தடவைதான் வந்திருக்கிறாள். ராதாம்மாவுக்கு உடல் நலம் இல்லை என்று தெரிந்த பின் அப்படி வந்து, அங்கிருந்து ஒரு மாட்டு வண்டியில் ஊர் வந்தார்கள். அழகாயிக்குப் பூசை வைத்து நேர்ந்து கொண்டார்கள். புதுக்குடிச்சாலையில் இருந்து ஐந்தாறு கிலோ மீட்டர் இருக்கும். முன்பெல்லாம் வழியில் கட்டிடங்கள் இருக்காது. ஒரே சோலையாக இருக்கும். பூவரசு, வாதமடக்கி, வேம்பு எல்லாமே இருக்கும். அழகாயி கோயிலுக்குக் குறுக்கே சென்றுவிடலாம். ஆனால் இப்போது அந்தப் பசுமைகள் இல்லை. ஆளே இல்லாத பன ஓலைக் குடிசைகள், முள் படல்கள் தெரிகின்றன. சாலையில் கண்டாற் போல் ஒரு ஓட்டுப் பள்ளிக் கூடம். துவக்கப்பள்ளி என்று விள்ளுகிறது, பலகை. அதன் இடிந்த திண்ணையில் இரண்டு ஆடுகள் படுத்திருக்கின்றன. ஓர் அடி குழாய். அங்கிருந்து பார்த்தால் பசுமையான வயல்கள் தெரியும். வெள்ளையும் சள்ளையுமாகக் கட்டிடங்களே தெரிகின்றன. தெருவீடுகளை ஒட்டிய கொல்லைகளில், தென்னமரங்கள் மட்டை தொங்கக் காய்ந்திருக்கின்றன. ஈசுவரன் கோயில் கோபுரம் தெரிகிறது. வழியில் ஏதேதோ கடைகள்... சாம்பு, காபித்துள், சரம் சரமாகத் தொங்குகின்றன. அந்த ஒரு கடைதான்