பக்கம்:உத்தரகாண்டம்.pdf/326

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
324   ✲   உத்தரகாண்டம்
 

ஆனாலும் கலவரம் முடிஞ்சிச்சி, வந்திருவாங்க...” சாதி, சமயம், கட்சி...

விளக்கு வைக்கும் நேரம். பக்கத்து வீட்டு அகிலாவிடம் எண்ணெய் திரி வாங்கிச் சென்று, கோயிலில் விளக்கேற்றுகிறார்கள். வெளி மாடத்தில் உள்ள அகலில் ஒன்றும், இன்னொன்றைப் பிள்ளையார் முன்பும் கன்னியம்மா ஏற்றுகிறாள்.


32

வாங்க, வாங்க... நீங்க இங்க சாப்பிட வருவீங்கன்னு மத்தியானமே சொன்னேன். இந்நேரமாச்சி?” என்று இராமலிங்கம் வரவேற்கிறார்.

“எப்படிங்க? வீட்டிலேந்து அவங்கல்லாம் போன பிறகு, கழுவி கிழுவி எல்லாம் சுத்தம் பண்ணினம். போட்டது போட்டபடி கெடக்கு. ஓடியிருக்காங்க. அந்த ரெண்டு வீட்டிலும் ஆரும் இல்ல. எதோ திட்டத்துல கட்டின வீடாம். அரசு, ஆட்சி மாறிட்டதாம், குடி இருக்க வுடலயாம்... போலிசுக்காரத் தம்பி நல்லவரு...”

“இந்த வூர்ப்பையன் தாம்மா, கருப்புசாமிப் பூசாரி மக, சிவசாமி தெரியுமா? அவம் பையன். கடேசிப் பையன். போலிசுன்னு சொல்றம், பந்தோபஸ்து காவல்னு உசிரைப் பணயம் வச்சிட்டு ட்யூட்டி பண்றானுவ. எதேனும் அங்கொண்ணு இங்கொண்ணு அடாவடி இருக்கும். ஆனா, மொத்தக் கட்சிகளும் ஆட்சியும் லஞ்சப் பணத்துல அமையும் கலாசாரத்துல என்ன நடக்கும்?...”

“உக்காரம்மா, ஏன் நிக்கிற? என்ன சாப்புட்டீங்க?” அவள் சொல்கிறாள்.

பெரிய கூடம். மேலே உயர்ந்த கட்டுமானம். குழல் விளக்கை உள்ளிருந்து வரும் பணியாளன் பொருத்துகிறான்.