பக்கம்:உத்தரகாண்டம்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38   ✲   உத்தரகாண்டம்

கொண்டு வருகிறாள். குழந்தையைக் கீழே இறக்கி இருக்கிறாள்.

“இந்தாம்மா...”

‘எனக்குத் தண்ணி...” என்கிறது பிஞ்சு.

‘இந்த வெங்கடேசுவரா பள்ளியில் ‘பொடி’ நிறமல்லவா? இது ‘ரோஸ்’ நிறமாயிருக்கு? எந்த ஸ்கூல்?”

“இது குட் செப்பர்டம்மா... நீளப்போயி, செந்தில் ஸ்டோர் பக்கம் சந்துல இருக்கு...”

“அங்கதான மோகன் ஸ்கூல்னு ஒண்ணு இருந்திச்சி?”

“மோகன் வித்யாலயா பெரிசாயி, பார்க் பக்கம் மூணு மாடி கட்டிட்டாங்க. அங்கதான் பல் டாக்டர், கண் டாக்டர், தோல் டாக்டர் எல்லாரும் ஆஸ்பத்திரி வச்சிருக்காங்க. இந்த ஸ்கூல், மின்ன ஜூலி டீச்சர் இல்ல, கான்வென்ட்ல...? அவங்க மருமக நடத்துது...”

“எனக்குத்தண்ணி” என்று பிஞ்சு நினைவு படுத்துகிறது. வெள்ளை ‘ரிப்பன்’ அவிழ்ந்து தொங்க, முடி கட்டையாகப் பிரிந்திருக்கிறது. செம்புத் தண்ணீரில் கொஞ்சம் உறிஞ்சு குழாய்க் குப்பியில் ஊற்றிக் கொடுக்கிறாள். பிறகு, தான் குடிக்கிறாள்.

“வாரேம்மா!” என்று வெண்பற்கள் தெரிய நன்றிச் சிரிப்பு மலரத் திரும்புகிறாள்.

“இந்தப் பக்கம் போற...?”

“அதா... செவந்திபுரம் புத்துக்கோயிலண்ட போகணும்...” மூன்று வயசு நிரம்பாத குழந்தைக்குப் படிப்பு...

“நீ அங்கே வேலை செய்றியா?”

“ஆமாம்மா, இவங்கம்மா போஸ்ட் ஆபீசில வேலை பாக்குறாங்க. வூட்ல இவங்க பாட்டி இருக்கு. புச்சா வூடு கட்டிட்டு வந்திருக்காங்க. நா முன்ன இவங்க ஏழுமல தெருவில் ஸ்கூல் பக்கத்தில இருந்தப்ப வேலை செய்துகிட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/40&oldid=1049426" இலிருந்து மீள்விக்கப்பட்டது