பக்கம்:உத்தரகாண்டம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64   ✲   உத்தரகாண்டம்

நான் கண்டு திட்டினேன். பாவி, இப்படி அநியாயமா ஒரு பொண்ணு வாழ்க்கையைக் கெடுத்திட்டியேன்னு... மாமா, மாமா, வூட்டுக்குச் சொல்லாதீங்க, இவள நான் கட்டிக்கல. அந்தப் புள்ளங்க- அவ முதப் புருசனுக்குப் பிறந்ததுங்க. அவன் ஆக்ஸிடன்ட்ல செத்திட்டான். எரக்கப்பட்டு ஆதரவு குடுத்தேன், அவ்வளவுதான். மணிய கூடிய சீக்கிரம் கூட்டிட்டு வந்து குடும்பம் வைக்கிறேன்”னானாம்! அன்னைக்கே கூரை இடிஞ்சி விழுந்திடிச்சி, சின்னக்கா!” என்று அழுகிறாள்.

அந்தப் பெண் மரமாக நிற்கிறாள்.

இவளுக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை.

“வெறும் எஸ்.எஸ்.எல்.ஸிதான் படிச்சிருந்தா. பிறகு மேலே சேர்த்து படிக்க வச்சாச்சி. அண்ணாமலையில ஒரு பி.எட்டும் முடிச்சிருக்கா. ஆனா ஒழுங்கா ஒரு வேலை கிடைக்கல. சன்னாநல்லூர்ல ஒரு அஞ்சுமாசம், தீபங்குடில ஒரு எட்டுமாசம்னு காலேல வீட்டவிட்டு ஏழு மணிக்குக் கிளம்பி, ஒரு பஸ் ரெண்டு பஸ் புடிச்சிப் போயிட்டு வந்தா. எல்லா வியாபாரம் பண்ணுற ஸ்கூல். ஆயிரம் ரூபாய்க்கு கையெழுத்து வாங்கிட்டு, கையில எழுநூறுதான் கொடுத்தான். ஸ்கூல் நடத்துறவங்க எல்லாருமே பெருச்சாளிங்கதா. ஒரு நல்ல சீல நாலு வாங்கிக் குடுக்கக் கூட முடியல. சாந்தா வீட்டிலேந்துதா படிச்சா, பி.ஏ. அவ புருசன் சரியில்ல. அக்கா தங்கைக்குள்ள பிரச்னை வரக்கூடாது, நான் போக மாட்டேன்னிட்டா. புதுக்குடியில ஒரு ஸ்கூல்ல சேந்தா. ஆறுநூறு தான் குடுத்தான் கையில. பெரீ...ய தர்மஸ்தாபனம் நடத்துற ஸ்கூல். ஒருநா, அட்டென்டரா வேலை பார்த்த பொண்ணேட மாராப்புச் சீலயப்புடிச்சு இழுத்திட்டு லாப் கதவைச் சாத்திட்டானாம் அந்தச் சண்டாளன். புதுக்குடியே அல்லோல கல்லோலப் பட்டிச்சி. நானே நீ இனிமே அந்த ஸ்கூல்ல வேல பாக்கப் போவாணாம்னிட்டேன், சின்னக்கா...”

“உம் புருசன் எப்படி இருக்கிறான்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/66&oldid=1049502" இலிருந்து மீள்விக்கப்பட்டது