பக்கம்:உத்தரகாண்டம்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66   ✲   உத்தரகாண்டம்

களே? போயி ஒரு வேலை கேளுங்க. இந்தக் காலத்துல உக்காந்திருந்தா, வேல தானா மடில வந்து வுழாது... ன்னா... கண்ணன் சவுதிலேந்து அங்கதா பணம் குடுக்கிறான். நாகபட்டணம் போயி படிகுடுன்னு அவகிட்ட கேட்டுப் போறதுக்கே குன்னிப் போறோம். சின்னவன் ராசு, அந்தக் கட்சி இந்தக்கட்சின்னு ஒரு பத்து பைசாக்குப் புண்ணியமில்லாம திரியிறான். பத்தாவதே தேறல. அப்பனிடம் வந்து சவடால் பேசுறான்...”

எங்கே தொடக்கம், எங்கே முடிவு என்ற தொடர்பு தெரியாமல் நிலை குலைந்திருக்கிறாள்.

“ரெண்டுபுள்ள இருந்தும், வழிவழியாக வந்த சொத்தொண்ணும் மிஞ்சல. ஏசண்டு சோத்துக்கு நாலுமூட்டை அரிசி குடுக்கவே ஆயிரம் கணக்குச் சொல்லுறான். வூடு பூச்செல்லாம் வுழுந்து படைபடையா சுவர் பொள்ளை, தரை பொள்ளைன்னு சிலோன்னு இருக்கு. மாடி மிச்சூடும் வெளவால் தொங்கிட்டுக் கெடக்கு... இங்க வந்தா, எல்லாம் சரியாயிரும்னு கோட்டை கட்டிட்டு வந்தோம். அந்தத் தலைவரைப் பார்க்கவே முடியல...” விரக்தியில் வேதனை கூடுகிறது.

“யாரு பராங்குசத்தையா சொல்ற? குருகுலம் நல்லாத் தானே நடக்குது?”

“அவரு அங்க வாரதே இல்லியாமே? பெரிய கட்டிடம், மூணுமாடி. காம்பெளண்ட் சுவரே மதில் போல இருக்கு. வெளியே கூர்க்கா யாரு என்னன்னு ஆயிரம் கேள்வி கேக்குறான். அந்தக் காலத்துல எப்பவோ நாங்க போன எடம் இல்ல அது. போன உடனே ஒரு ஆலமரம் இருக்குமே? எனக்கு அதுதான் ஞாபகம். அதெல்லாம் வெட்டிட்டாங்க. நீளக்கூரை போட்ட எடங்கள் எதுமே இல்ல. மின்னாடிதான் ஆபீஸ்னு இருந்திச்சி. எல்லாம் அந்தப் பொம்புள கையில தான் இருக்கு அவுரு அங்க வாரதே இல்லையாம். சோத்துப்பரக்கத்துக் கந்தாண்ட யாரோ சாமியாமே? அங்கதான் இருப்பாராம். இன்ஜினிரிங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்தரகாண்டம்.pdf/68&oldid=1049507" இலிருந்து மீள்விக்கப்பட்டது