பக்கம்:உத்திராயணம்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 லா, ச. ராமாமிருதம்

இந்த வயதில் எங்களுக்கு வேண்டியதென்ன? இனம் தெரிந்த, அன்பும், ஆதரவும்தான். ஒரு துளி கிடைத்தாலும் நினைவு சேமித்து வைத்துக்கொள்ளும் அமுத தாரை.

கோபாலா, சுமைதாங்கிக்குத் தனி நன்றி செலுத்தும் வழிப்போக்கன் இருக்கானோ? வழியில் கண்டதும் பொதியை இறக்கு... அவ்வளவுதான் யாருக்கும் தெரிந்தது.

யாருமில்லாத சமயத்தில்தான் யாருக்கு உண்டோ அவர்க்கு மட்டும் ஆண்டவன் தரிசனம் கிட்டும்.

ஆபீஸ் போக வேண்டியவாள் எப்பவோ போயாச்சு ,

மன்னி கிணற்றடியில் துணி துவைத்துக்கொண்டிருந். தாள். ஐயோ, ஜலத்தின் பிசுக்கு t சோப்பும் துரைக்காது. பருப்பும் வேகாது.

வைதேஹறி, பள்ளிக்குப் புறப்பட ஆயத்தமாகிக் கொண் டிருந்தாள். புத்தகப் பையுள் இந்த டிபன் டப்பா போகாமல் ஏன் மக்கர் பண்றது?

பின்னாலிருந்து விவரிக்க முடியாத ஒரு சக்தி உந்தி, முகம் திரும்பினாள். அப்பா கட்டிவில் எழுந்து உட்கார்ந்து அவளையே பார்த்துக்கொண்டிருந்தார்!

பூமி, தான் சுழலும் அச்சில் இன்னும் ஒரு பின்னம் சாய்ந்தது.

அப்பா!' அலறிக்கொண்டு அணைக்க ஓடி வந்தவள், சட்டென அச்சங் கண்டு கட்டிலண்டை நின்றுவிட்டாள். எப்படியும் நாலு வருடத் துர்க்கத்திலிருந்து விழித்த இந்த மனுஷன் புது மனுஷன்தானே! அவர் பார்வை சூழ் நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக நோட்டமெடுத்துக் கோண்டிருந்தது. அது சென்றவிடமெல்லாம் அவர் நாட்டமும் தொடர்ந்தது. திகிலில் கையைப் பிசைந்து கொண்டு நின்றாள்.