பக்கம்:உத்திராயணம்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 13 லா. ச. ராமாமிருதம்

புகுந்துடுவான், இல்லாட்டா பாம்பு, அதை அடிக்கவும் கூடாது. இந்தப்பக்கம் எல்லாரும் நாகத்தை வழிபட றவா. சரியான தண்டாவில் மாட்டி வெச்சுட்டே, வெளியிலும் துரத்த முடியல்லே. உள்ளேயும் வெச்சுக்க முடியாது. என்ன செய்யலாம்?"

நல்ல கதையாயிருக்கே, நீதானே கடைசயா கொல்லைப்

புறத்திலிருந்து வந்தவள். ஆனால் அவளோடு நான் தர்க்கம் பண்ணவில்லை. வீடு முழுக்க சலிச்சுப் பார்த்தாச்சு.

அத்திம்பேர் பெருமூச்செறிந்து நிமிர்ந்தார், நான் நினைக்கறேன் வளந்தி!' அறுந்த தாம்புக்கயிறை எடுத்து ஆட்டினார்.

"அப்போ நான் பொய் சொல்றேன் என்கறேளா?” அக்காவுக்கு உதடுகள் நடுங்கின.

அத்திம்பேர் தற்காப்பில் இரண்டு கைகளையும், சரி சரி ஏதேனும் ஆரம்பிக்காதே... மறுபடியும் தேடலாம்’ என்றார்.

ஹால் பூரா மல்லி மணம். சிறு போராய் மல்லி குவிந்து கிடந்தது. இந்த ரகளையில் அதைத் தொடுக்க யாருக்கு மனம் வரும்?

நான் மலர்ந்து கொண்டேயிருப்பேன்.

ஆனால் யாருக்கும் கிடைக்க மாட்டேன்.

இது நடந்து அஞ்சு நாளாகியிருக்கும். மத்தியானம் அக்கா தபாலாபீஸுக்குப் போயிருந்தாள், கார்டு கவர் வாங்க

நான் புத்தக அலமாரியில் குடைந்து கொண்டிருந்தேன்.

ஜனனி, ஜனனீ!’’ அக்கா அவசரமாக வாசற் கதவைத் தட்டினாள்.