பக்கம்:உத்திராயணம்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உத்தராயணம் 5கதவைத் திறந்துவிடுகிறாய். அவ்வளவுதானே! இப்படிக் கண்ணால் கரிப்பதற்குப் பதிலாக வாயைத் திறந்து எங்களைத் திட்டிவிடலாம். ஆமாம் நாங்கள் கொம்மாளம்தான் அடிப்போம். ரேடியோ சிலோன்தான் கேட்போம். முழு வால்யூமில்தான் முடுக்கிவிடுவோம். சினிமாப் பேச்சுத்தான் பேசுவோம். நீ பொறுத்துண்டு தானிருக்கணும், இல்லாட்டி இதென்ன மெளனம்? உனக்கு 'ததரினன்னா'ன்னா எங்களுக்கு லலல்லா". நாங்கள் நீயா? வேலையும் கிடைக்க மாட்டேன்கிறது. எங்களுக்குப் பொழுது போக்குக்கு என்னதான் வழி? வீட்டுக்கு வீடு போய்ப் பாருங்கள். சத்தம் உங்களுக்கு B.P. எங்கள் பீதிக்கு அதுதான் மறதி, வழித்துணை. கடன் வாங்கியோ, திருடியோ கலகலப்பாய் இன்னிக்கு இன்றையோடு போச்சா? நாளையை நாங்கள் எங்கே கண்டோம்? உங்களுக்கு நாளை இருந்தது.”

நான் பதில் பேசவில்லை. பேசுவதில்லை, பேச்சு நியாயம் எப்பவோ தாண்டியாச்சு.

கண்ணன் அந்த நாளிலேயே செல்லம், கொடுத்த சலுகைகளுடன் தானாக எடுத்துக்கொண்ட உரிமைகளும் இப்போ சேர்ந்துவிட்டன. அவன் தம்பி மெளனமாய் எனக்கு விழும் சாட்டையடியைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான் Boss இன் Hatchet Man

நான் இன்னும் வெறுக்கவில்லை. ஆனால் இவர்கள் உலகத்தை வெறுத்தாச்சு.

நட்ட பயிர் அம்புகளாய்க் காய்க்கிறது. சரப்படுக்கையில் படுத்து, உன் உத்தராயணத்துக்குக் காத்திரு.

"கிருஷ்ணா!" அது எங்கே கிருஷ்ணா என்று கத்துகிறது? அருவருப்பான, அபஸ்வர அழுகையின் தேம்பல் போன்ற ஒரு சத்தம். ஆனால், அதைக்கேட்டதும் ஹரிணி பாதி பேசும் படத்தை, மார்பில் கவிழ்த்துக்கொண்டு படுத்த