பக்கம்:உத்திராயணம்.pdf/163

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வித்துக்கள்

போஸ்ட், !

அம்புஜம் எழுந்து மேலாக்கை அள்ளிப் போட்டுக் கொண்டு வாசலுக்கு ஓடினாள்.

கொழுகொழுவென்று பசுப்போல் உடம்பு, வயிறு எல்லாம் லொங்கு லொங்கு’ என்று ஆடின.

தாளைத் தள்ளி கதவைத் திறப்பதற்குள் தபால்காரன் மூன்றாம் முறையும் கூவிவிட்டான். அவள் கையில் ஒரு கவரைத் திணித்துவிட்டுச் சென்றான். அவனுக்குச் சற்றுச் சிடுசிடுப்புத்தான்க

கடிதத்தை முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்துவிட்டு ப்ளாங்கு-தபால் முத் திரையைக் கணிக்க முயன்று தோற்றுப் போய், திறந்து பிரித்தாள்.

Dear Parent, இந்தக் கடிதம் கண்ட சுருக்கில் பள்ளிக்குத் தயவு செய்து வரவும், உங்கள் பையன் பூரீதரைப் பற்றிப் பேச வேண்டும்.

- கிறுக்கல்

தலைமை உபாத்யாயினி.

இது இரண்டாவது முறை.