பக்கம்:உத்திராயணம்.pdf/164

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 லா. ச. ராமாமிருதம்

இதற்கு முன், பக்கத்து nட் பெண்ணின் பின்னலை, அவளுடைய கத்திரிக்கோலைக் கொண்டே கத்தரித்துவிட் டான். அம்புஜத்துக்குத் திகிலெடுத்தது: இந்த சமயம் என்னவோ?

வாசலிலிருந்தே கண்ணோட்டத்தில் கூடத்தில் சுவர்க் கடியாரம் மணி இரண்டு காட்டிற்று.

உள்ளே வந்தாள். நரேஷ், கைகால்களை விரித்தபடி, வாய் மொக்கு லேசாய்த் திறக்க, அரைக் கண்ணில் அயர்ந்து துரங்கிக்கொண்டிருந்தான். அவளுக்குப் புன்னகை அரும் பிற்று. குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள். நரேஷ் தூங்கும் நேரம், மாருதியும் ரீதரும் பள்ளிக்குப் போயி ருக்கும் நேரம்தான் அவளுக்கு ஒய்வு நேரம். நாள் பூரா உழைத்துவிட்டுப் பகலில் துரக்கத்தைத் திருடும் நேரம் ஆனால் இன்று இனிமேல் வழியில்லை. பாதியில் கலைந்த தால் உடம்பு முறித்துப் போட்டாற்போல் வலித்தது.

இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பி, பள்ளிக்கூடத் துக்குப் போய், திரும்பியும் ஆகனும், டிபன் பண்ண. வெங்கட் கு இது போன்ற கம்பன்ஸுக்கெல்லாம் நேரம். கிடையாது. தினமே வீடு திரும்ப இரவு எட்டு. அப்புறம், டி.பன். அப்புறம் 9-30 பத்துமணிக்குச் சாப்பாடு. அப்புறம் பற்றை ஒழித்துப் போட்டுவிட்டு, படுக்கையில் அவள் விழுகையில் ஸ்-பதினொண்ணு!

s of gro f * *

அட, விடிஞ்சேபோச்சே! இப்போத்தான் கண் மூடி னாற்போல் இருந்தது.

இந்த நியதி இப்படியே படிஞ்சு போச்சு, இது மாறினால்

கூட சரிப்படாது எனுமளவுக்கு.

அம்புஜம் உட்கார்ந்து தலைவாரிக்கொள்ள ஆரம்பித் தாள். கூந்தல் நீர்வீழ்ச்சி போல் முதுகில் இறங்கி, தரையில்