பக்கம்:உத்திராயணம்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

互56 லா, ச. ராமாமிருதம்

விவரீயன் கேஸ்.

குறை ப்ரசவம்,

இன்கயூபேட்டர் பேபி. இங்க் ஃபில்லர் மூலம் உணவு, ஏகப்பட்ட மாத்திரைகள், சத்துக்கள் தாய் செத்துப் பிழைத்தாள்.

அப்புறம் இரண்டு அபார்ஷன்கள்.

பிறகு பூரீதர்.

ன்க்யூபேட்டர், இங்க் ஃபில்லர் ஃபீடிங் மாத்திரை, !னகயூ ബ ஊசி, இத்யாதி.

பெரிய உசிர் ஊசலாடுகையில், சின்னதை என்ன கவனிக்க முடியும்:

டாக்டர், வெங்கிட்டுவை எச்சரித்துவிட்டார்: "மிஸ்டர் உங்கள் மனைவி இனிக் கருத்தரிக்க லாயக்கில்லை. அப்படி நேர்ந்தால், அவள் உயிருக்கே ஆபத்து. அப்புறம் நாங்கள் பொறுப்பு இல்லை. ’’

நாலு வருடங்களுக்குப்பின் அப்படித்தான் நேர்ந்தது. ('பெண்ணுக்கு ஆசைப்பட்டேன். பிள்ளையா? சரி, பெரு மாள் சித்தம் அப்படியானால் நாம் என்ன செய்ய முடியும்?" நீங்கள் ஒண்னும் செய்யவேண்டாம். கட்டாயமாகக் கருத் தடை ஆபரேஷன் செய்துகொண்டே ஆகவேண்டும். உங் களுடைய பரீrைகள் இத்தோடு போதும்.’’)

நரேஷ் முழு மாதம் முறையாகத் தாங்கி நார்மல் பிரசவம் கடைசியில் ஆயுதப்ரயோகம், அவ்வளவுதான்.

பிரஹஸ்பதிகள் (அல்லது தன்வந்தரிகளா?) பொய்த்துப் போனார்கள். குழந்தைகள், தெய்வம் தந்த வரங்கள். பெற்றோர்களின் நல்லம்சங்கள். ஒவ்வொருத்தனிடமும் விதம் விதமாகக் கூடி, மூன்றுபேரும் மூன்று சிவகுமாரர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/166&oldid=544254" இலிருந்து மீள்விக்கப்பட்டது