பக்கம்:உத்திராயணம்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடை பெற நில் 39

மோட்டா நூலில் வளர்ந்துகொண்டிருக்கும் துணியில் கட்டான்களில் திடீரென்று பளிச்சென்று முகம் துடைத்த ஒரு மினுக்கல். அத்தனையும் பட்டு.

அதென்னவோ கூனப்பனுக்கு இப்போ அதிசயமா யில்லே சினிமாக் கொட்டாயில் உருவங்கள் ஆடிக்கொண் டிருக்கும் திரை சட்டென வெறும் திரையாகி இடை வேளைக்கு லைட் வந்த மாதிரியிருந்ததோ என்னவோ?

வந்தவள் நெல் குதிரிலிருந்து இறங்கி, பக்கத்தில் வந்து நின்றாள்.

வந்திருக்கேன்.'

தலையசைத் தான்க

அவளை வெளியில் அனுப்புவதற்காக என்னைக் காட்டிக் கொள்ளும்படி ஆயிட்டுது.”

அவள் இருந்தால் என்ன?” அவள் பதில் பேசவில்லை. புன்னகை புரிந்தாள். என்ன அர்த்தமோ?

இதோ வந்திடுவா, கும்பலைக் கூட்டிண்டு.” அவள் வருவதற்குச் சற்று நேரமாகும். அந்த பாட்டில்தான் அவளை அனுப்பியிருக்கிறேன்.'

  • கூனப்ப முதலி தலையை ஆட்டினான். நான் உன்னோடு இருக்கப் போறேன்.” இரு இரு எப்பவுமே நீ இங்கே இருக்கணும். கையடிச்சுக் கொடு.” கையை நீட்டினான்.

அதெப்படி? நான் உன்னைத் தொட முடியாது. எனக்குப் புருஷன் இருக்கான் என் வாசம் என்னவோ வேளைக்கு வேளை வீட்டுக்கு வீடு மாறிக்கொண்டிருந் தாலும், இங்கேயே நிலைச்சிருப்பது நடவாத காரியம். இடம் மாறிக்கிட்டேயிருப்பதுதான் என் வாழ்வே.'