பக்கம்:உத்திராயணம்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சப்த வேதி 39

களுக்கே பலியான இலக்கிய கர்த்தாக்களின் ஆவிகள் உலவும் அந்த நேரத்திலே, என் பின்னிருந்து கிளுக்' என்று ஒரு சிரிப்பு ஒலித்தது. அது என்செவியில் மோதியதும், நான் என்னத்தைக் கேட்டேனோ? கனகசபையில் ஆடும் சிவபிரானின் காற் சிலம்பொலியோ? அவன் கேலிக்கூத்தின் ஏளனம் அத்தனையும் அச்சிரிப்பில் ஒலித்தது.

ஹேல்லோ எத்தனை நாளாய் அரிச்சுவடியில் முனைந் திருக்கிறீர்கள்? காலேஜ் வந்ததும் ஸ்கூல் பாடம் திருப்புகி றீர்களோ?

அவளுடைய குளிர்ந்த மூச்சு என் பிடரியில் விளையாடி யது. புன்னகையில் அவள் கன்னம் குழிந்தது. மை தீட்டிய விழிகளில் குறும்பொளி வீசியது.

LഃഖTങ്ങ്' '

புன்னகை தவழும் முகத்துடன் அவள் சற்றுப் பின்ன டைந்தாள். அவள் மயிரில் பதுங்கிய சாமந்திக்கொத்தின் மணம் அவளைச் சுற்றிக் கம்ழ்ந்தது. அவள் கட்டியிருந்த மூக்குப்பொடிக் கலர் புடவை. அவள் நடக்கும்பொழுது சலசலத்தது. அணைக்கவே கடைந்தாள் போன்ற அவள் இடை அவள் நடக்கும்பொழுது ஒடிந்தது.

நான் இதுவரை காணாததை அன்று கண்டேன். நானும் பவானியும் மணம்புரிந்து தனிக்குடித்தனம் நடத்தினோம். காலேஜ் வாழ்க்கையின் நாகரிகம் அவள் பசுமையை வெதும்பி, அவளைப் பிஞ்சில் பழுத்த வெம் பலாக்கு முன், நான் அவளைக் கொண்டுவிட்டேன்.

ஆனால், பவானி, கொலுவில் வைத்த பொம்மைபோல், பார்க்கவும் கேட்கவும் அழகேயன்றி, வேறு சமையல் செய் யவோ, வீட்டு வரவு செலவுக் கணக்கைக் கவனிக்கவோ, குடும்பப் பொறுப்பை ஏற்கவோ பயனிலள். அதனால் என்ன, கடவுள் புண்ணியத்தில் ஏதோ கொஞ்சம் செளகரி