பக்கம்:உத்திராயணம்.pdf/62

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 லா, ச. ராமாமிருதம்

முடியாது?’’

கணிரென்று அவன் குரல் வெண்கலம் மாதிரி, சுத்தமாய் அவ்விடம் முழுவதும் ஒலித்தது.

என்ன !’’

அவன் அப்படியே அயர்ந்துவிட்டான். மூலையில் சாத்தியிருந்த உலக்கை, தானாகவே உயிர்பெற்று தத்தித் தத்தி வந்து, அவன் மண்டையில் இடித்திருந்தால், அவனுக்கு அவ்வளவு திக்பிரமை ஏற்பட்டிருக்காது. திறந்த வாய் மூடவில்லை. கடைவாய் வழியாகப் புகையிலைச் சாறு வடிந்து தாடி மயிர்கள் முனையில் இரத்தத் துளிகள் போல் நின்றது.

அவள் அவனைக் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கவில்லை கோபமாய்த் தலையை ஒரு வெட்டு வெட்டி மேல.ாக்கைச் சரிப்படுத்திக்கொண்டாள்.

அவன் அவளை ஒருமுறை, உச்சந்தலையிலிருந்து, உள்ளங்கால் வரையில் நெற்றியிலிருக்கும் குங்குமப்பொட்டு, முக்குத்தியின் வெள்ளைக்கல், கழுத்துப் பவழ மாலை, அவளுடைய மெல்விய மேலாக்கின் வழியாகத் தெரியும் வெள்ளை ரவிக்கையின் முடிச்சு எல்லாவற்றையும் ஏற இறங்கப் பார்த்தான்.

காண்பிக்க மாட்டையே?’’

  • முடியா...' அவள் பேசி முடியுமுன், அவள் வாயின் பேரிலேயே குத்து விழுந்துவிட்டது.

அவள் கூட அதை எதிர்பார்க்கவில்லை. மறுபடியும் அவன் கையை ஓங்கினான். கருமான் பட் டரைச் சுத்தி இறங்குவதுபோல் அது இறங்கியது. அவள் தலையைக் குனிந்து, கைகளை நீட்டித் தடுத்தாள். குறி தப்பி, அவள் பிடரியில் அந்த அடி விழுந்தது. அவன் கையில்