பக்கம்:உத்திராயணம்.pdf/63

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலி ஆடு 53

ஒரு வெள்ளி மோதிரம் அணிந்திருந்தான். அவளுடைய ரவிக்கைத்துணி ஸ்ன்னமாயிருந்ததில், பர்ரென்று கிழிந்து விட்டது. அப்படியே மோதிரம், அவள் முதுகில் கீறிக் கொண்டே இறங்கிவிட்டது.

எப்பொழுது முதலடி அடித்தானோ, அத்துடன் அவ னால் நிறுத்த முடியவில்லை. அவனுக்கு இரத்த வெறி மாதிரி பிடித்துவிட்டது. அவன் கண்கள் கிட்டத்தட்டப் டைத்தியக்காரன் கண்கள் போலவே ஜ்வலிக்க ஆரம்பித்து விட்டன.

அடிமேல் அடி குத்தின்மேல் குத்து:

அவள் மூச்சிற்கே திக்குமுக்காடினாள். அவள் மனதில் உண்டான பயங்கரத்தில் அடிகளின் வலி கூடத் தெரிய வில்லை. பிடித்து அமுக்குவதுபோல் இருந்தது. ஐயோ! கொஞ்சம் மூச்சு அகப்பட்டால் போதும் ஒரு மூச்சு: ஒரே மூச்சு, ஆனால் அதற்குள் ஒரு குத்து!

இதோ காம்பிக்கிறேன்!'

அப்பா: கடைசியில் வாய் திறந்து சொல்ல முடிந்தது: வாயிலிருந்த ரத்தத்தை வெளியில் துப்பினாள்.

அவள் குரலின் சத்தத்தைக் கேட்டதும், ஓங்கிய கை அப்படியே அந்தரத்தில் நின்றது.

  • * fيبية ة

சில வினாடிகள் அப்படியே ஓங்கிய கையுடன், வெறி பிடித்த கண்களுடன் அவன் அவளைச் செய்திருக்கும் அலங் கோலத்தைக் கண்டு ஆனந்திப்பதுபோல் வெறித்த வண்ணம் இருந்தான்.

அவளைப் பார்ப்பதற்கு மகா கண்ணறாவியாக யிருந்தது. சற்றுநேரத்திற்கு முன்னால், சுத்தமாய்ச் சிக்கு பிரித்து ஆற்றியிருந்த மயிர், அலங்கோலமாய், முகத்திலும் விழுந்திருந்தது. குங்குமத் திலகம் சிதறி அழிந்திருந்தது.