பக்கம்:உத்திராயணம்.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

密盛 லா. ச. ராமாமிருதம்

லண்டை வந்து நின்னுண்டுட்டேன். என்னாலே சாத்தியப் படலெ, ரொம்ப நாழியாகக் காத்துண்டு இருந்தேன். அவா கூட வந்து சாப்பிட்டுட்டு ஆபீஸ் ரூமுக்கும் போயிட்டா, அவன் வரல்லே. திடீர்ன்னு வலக்கண்ணும் வலது தோளும் துடிச்சுது. அப்பறம் எனக்கு இருப்பே கொள்ளலே, கோவிலுக்குப் போறேன்’னு தாவாரத்திலே இருந்த படியே அவர்கிட்டச் சொல்லிண்டு, நான் கோவிலுக்கு ஒடினேன்.

நான் உள்ளே நுழையரத்துக்குச் சரியா, திரையை திடீர்ன்னு விலக்கி கற்பூர ஹாரத்தி காண்பிச்சான். பளிச் சுன்னு ஒரே ஜகஜ்ஜோதியா அம்பாள் மின்னினாப்போலே இருந்தது. எனக்கு அப்படியே மயிர் சிலிர்த்துப்போச்சு. அவன் திடீர்ன்னு தாம்பாளத்தே கீழே போட்டுட்டு, ஹா' கர்ஜித்துண்டு ஆட ஆரம்பிச்சுட்டான். ஆவேசம் வந்து டுத்து, கையும் காலும் பறக்கறது. மூஞ்சி ஒரே ரத்தச் சிகப்பா போயிடுத்து. மூஞ்சியிலே ஒரு தனி தேஜஸ் வந்து டுத்து! நன்னா அரை அங்குல தடுமனுக்கு இருந்த திரையை அனாயாசமா நார்மாதிரி கிழிச்சிப்பிட்டான். ஒரே ருத்தரா காரமா எல்லாத்தையும் த்வம்ஸ்ம் பண்றமாதிரிக் கிளம் பிட்டான். நாலு பேராச் சேர்ந்து கட்டிப் பிடிச்சும் போறல்லே. அப்பறம் யாரோ. நன்னா ஒரு அரையனா கல்பூரம் இருக்கும் ஏத்திண்டு வந்து காண்பிச்சா. அதை அப்படியே முழுங்கிட்டான். அப்பவே ஆவேசம் தணிஞ்சு போச்சு. உடனே களை போட்டுத்து. உடம்பு மூஞ்சியெல் லாம் ஜலப்பிரளயமாய்க் கொட்டிப்போச்சு. அப்படியே தொவண்டு கீழே விழுந்திட இருந்தான். அதற்குள்ளே ரெண்டுபேர் அணைச்சுண்டா. என்னையறியாமே நானும் பிடிக்க ஓடினேன். அப்போதான் அவன் என்னைப் பார்த் தான். அவன் முகம் தனியா மலர்ந்தது. சிரிச்சான். அம்மா முத்துக் கோத்தாப்பலே, அவன் பல்லு பளபளன்னு என்னம்மா மின்னித்துடி அவனைக் கொண்டு போயிட்டா, நானும் ஆத்துக்குத் திரும்பிட்டேன்.