பக்கம்:உத்திராயணம்.pdf/99

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகிலா 89

அந்தக் கண்களில் நாட்டம் இல்லை. விட்டத்தில் அல்ல எங்கேயோவிற்கு அப்பால் பதிந்திருந்தது. லக்ஷணமான முகம்-உதடுகள் காய்ந்திருக்கின்றன. உதடுகள் அசை கின்றன. குனிந்து ஒட்டுக்கேட்க முயல்கிறேன்.

ஏதோ ஸ்லோகம்,

அப்பா வால்மீகி ராமாயணத்தில் அத்தாரிட்டி கட்டுரைகள் கூட எழுதியிருக்கிறார். உங்களிடம் காட் டனும் திடீரென்று இப்படித்தான் மத்தாப்பூ மாதிரி ஸ்லோகங்கள் கொட்டும். இன்னும் உரக்கவே கூடச் சொல்வார். வந்தமாதிரியே அடங்கிவிடும். திடீர்னு சுய நினைவு கூட அபூர்வமா, கண்ணில் தெரியும். ஆனால் அதை யொட்டிப் பேச்சைக் கூட்டுமுன் சாளரம் மூடிவிடும்.'

"இவருக்குத் தென்பு எப்படி?’’

மாமி, உப்பில்லாமல் சாதத்தில் மோர்விட்டு மையாக் கரைச்சு, திப்பியை எறிஞ்சுட்டு அந்த அமிர்தத்தைக் குழந் தைக்குச் செலுத்தறமாதிரிப் புகட்டணும். ஒருநாள் தொட்டுக்க ரஸ்த்தெளிவு ஒரே ஒரு சொட்டு... நாங்கள் பட்டபாடு, புரைக்கேறி இழுத்துண்டு போன மூச்சு திரும்பி வரதுக்குள் எங்கள் உசிர் போய்ப் போய்த் திரும்பி வந்தது."

அவன், வேடிக்கையாக்கட இருக்கு படுக்கையை, அரைத் துணியை மாத்த அஞ்சு நிமிஷம் உக்காத்தி வெச் சாலே B.F. தேரையாத் தாவறது. ஆபீஸில் திடீர்னு மயக்கம் போட்டு மடேர்னு விழுந்தவரை காரில் போட் டுண்டு வந்து கட்டிலில் விட்டா. ஆச்சு வருஷம் முனு. ஆறது. இதே ஸ்டேஜ். இதே ஸ்டேட்டுத்தான். அல்லோ பத்திக், ஆயுர்வேதா. சித்தா-காட்டாத ஸ்பெஷலிஸ்ட் இல்லை. ஸ்ட்ரோக், மூளையில் தாக்கி, லrோப லrோப லெல்களில் எதையோ ஒண்ணை அழுத்திண்டிருக்காம், எக்ஸ்ரேக்குப் பிடிபடல்ல. சிகிச்சையும் பண்ணமுடியாது."

விமோசனமேயில்லையா?”