பக்கம்:உத்திராயணம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 8 லா, ச. ராமாமிருதம்

என் நெஞ்சைப் படித்தாற்போல். அவன் தாய், பின்னே வேறெப்படியிருக்க முடியும்? அவர் மாபாரதமாப் படுத்துவிட்டபின் ரெண்டு உடன் பிறந்தாளுக்குக் கலியாணம் நடந்திருக்கு. வைதேஹி காத்திண்டிருக்கா, உடனே அவசரமில்லாவிட்டாலும், தம்பிமார்கள் மூணு பேரும் வெவ்வேறு ஊரிலே அவாளவால் படிப்பில் இக் கட்டான கட்டத்தில் இருக்கா யானைத் தீனி தின்னும் படிப்புகள். எல்லாம் ஆசைதான், எப்படியேனும் தலை யெடுக்க மாட்டோமா? ஆரம்பிச்சதை நடுவிலும் விட முடியாது! பிராம்மணன் கரடியைக் கண்டிண்ட கதை தான்.”

என்னம்மா, அவர் ஏதோ வந்த இடத்தில் அவரையும் நம் முறையீடுக்கு ஆளாக்கணுமா?’’

பையனுக்கு லேசாய்க் கேலி நிறைய ரோசம். 'அதுக்கில்லேடா. மூத்ததாய்ப் பிறக்கக் கூடாதுன்னு ' பையன் வாய்விட்டுச் சிரித்துவிட்டான் அதெல்லாம் உன் இஷ்டமா என் இஷ்டமா? பிறக்கணும்னு இருந்தால் எங்கானும் ஜனிச்சுத்தானே ஆகணும் எல்லாம் நரியூருக்குப் பயந்து புவியூருக்குப் போன சமாச்சாரம்...

அதுக்கில்லேடா, ' வேண்டாம்மா, விட்டுத் தள்ளு. நீ பேசறது வேதாந்: தமிா, யதார்த்தமா? இதில் ஏதேனும் பலனுண்டா?’’

மாமாவுக்குத் தெரியாதது இல்லை. கட்டுத் தறி போல, கோபாலனின் ஊனின தைரியம் இல்லாட்டா, எங்கள்மேல் எப்பவோ புல் முளைச்சிருக்கும்...'

சரி அம்மா, விடேன்."" சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இதெல் லாம் எங்கே கொண்டுபோய் விடப்போகிறதோ என்று ஒரு திகைப்பு. தீர்ப்பு ஆனவன், தீர்ப்பு நிறைவேறக் காத். திருக்கும் ஒரு விரக்தி, கூடவே குழப்பம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உத்திராயணம்.pdf/98&oldid=544187" இலிருந்து மீள்விக்கப்பட்டது