பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


11. சளியும் இருமலும்

'சளி பிடித்ததோ சனியன் பிடித்ததோ' என்பது பழமொழி. அவ்வளவு சங்கடத்தையும் சந்தோஷமின்மையும் கொடுத்து சலனப் படுத்திவிடுகிறது. இந்தச் சளி ஒரு நொடிகூட நிம்மதியாக சுவாசிக்க முடியாமல், இந்தச் சங்கடத்தையே நினைத்துக் கொண்டிருக்கிற அளவுக்கு சளியும் இருமலும் என வந்து ஆட்சி பண்ணி விடுகிறது.

“இருக்கும் வரை எதையும் லட்சியம் செய்ய மாட்டோம் - பாராட்ட மாட்டோம். பெருமையுறப் பேச மாட்டோம். அதை இழந்த பிறகு அல்லது நம்மை விட்டு அது அகன்ற பிறகு தான் அதன் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்வோம். பிறகு வருந்துவோம். என்பதும் பழமொழி.

இந்தப் பழமொழிக்கு மிகவும் உண்மையான சான்றாக இருப்பது சுவாசம்தான். மூக்கை அடைக்கும் போதுதான் மூச்சின் பெருமை புரிகிறது. அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளத் துடிக்கிறது நெஞ்சமும் நினைவும்.

ஆனால், சளியும் இருமலும் மிகச் சாதாரணமான நோய்தான். நாம் இயற்கை விதிகளுக்கு மாறாக, இயற்கையான வாழ்வுக்குப் புறம்பாக நடக்கிற பொழுது இது வரை நடந்தது போதும் 'இனிமேல் இதைப் பின்பற்றாதே, மேலும் தொடராதே' என்கிற முறையில் எச்சரிப்பதற்காக வரும் முன்னோடித் தூதுவர்