பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

67


மூக்குச்சளி, அதைத் தொடர்ந்து இருமல். அதற்கும் மேலே பலப்பல மூச்சு வியாதிகள்.

ஏன் உண்டாகிறது ?

காற்றிலே கலந்து விடுகின்ற தூசி மற்றும் கடுமையான துர்வாசனை: நாம் சாப்பிடுகிற உணவிலே கலந்து விடுகின்ற கண்ணுக்குத் தெரியாத விஷக்கிருமிகள்; இவற்றையெல்லாம் ஏற்று. எதிர்த்துக் கொல்கின்ற சக்தி குறைந்த தேகம் இவைதான் சளி ஏற்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன. அதிக அலைச்சலும், ஒய்வின்மையும், உறக்கமின்மையும் உடலை சூடாக்கி விடுகின்றன. அதன் வெளிப்பாடுதான் சளியும் இருமலும்.

மழையில் நனைந்து விடுவது அல்லது அதிக நேரம் குளித்துக் கொண்டிருப்பது சளி பிடிக்கக் காரணம் என்பார்கள். சளிக்கு இது காரணமல்ல. ஆனால் சளி பிடித்த பிறகு மழையில் நனைவது. அதிக நேரம் குளிப்பது என்பது அதிகமாகத் தூண்டி விட்டு. அதிக வேதனையைப் பெருக்கி விடுகின்றது.

வந்தபிறகு

சளி வந்த பிறகு என்ன செய்வது ? வந்த வேகத்தில் அதை விரட்ட முயல்வது கடினம் தான். தடுத்துக் கொள்ளலாம். தவிர்த்துக் கொள்ளலாம். உடனே போக்கி விடவேண்டும். என்று முயற்சித்தால் முடியாது. இந்த மூக்கடைப்பு சளி குறைந்தது ஒரு வாரம் கூடத் தொடரும் என்பார்கள். அது அவரவர் உடலின் சக்தியைப் பொறுத்தது. அல்ல திடகாத்திரமான உடலை விட்டு இது வெகு சீக்கிரமே போய்விடும்.