பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


மூக்கிலிருந்து ஒழுகுகிற சளியை, துடைத்துவிட வேண்டும். மூக்கை அழுத்திப் பிதுக்கி வெளியேற்றத் தொடங்கினால், மூக்கின் உட்புறமெல்லாம் புண்ணாகி எரிச்சல் எடுக்க ஆரம்பித்துவிடும்.

ஒழுகலும் இருமலும்

சளி ஒழுகுவது என்பது இயற்கையின் சக்திதான். வேதனையிலிருந்து விடுவிக்க உதவும் விந்தையான ஏற்பாடுதான். இப்படி சளி ஒழுகுவதின் மூலம், வெளிப் பகுதியிலிருந்து உள்ளே சென்று வேண்டாத விஷக் கிருமிகளை வெளியேறச் செய்து விடுகிறது.

சளி கொஞ்சம் முற்றி இருமல் ஏற்பட்டு விடுவதும் உண்டு. இப்படி இருமல் ஏற்படுவதும் நல்லதுதான். அதிகமாகக் குலுங்கி இருமுவதன் மூலம், உள்ளிருந்து அடைப்பட்டுக் கிடக்கும் காற்று திடீரென்று வெளியேற்றப்படுவதுடன் வெளியிலிருக்கும் காற்றும் உள்ளே புகுந்து விடுகின்ற பெரிய வாய்ப்பும் கிடைத்து விடுகிறது. இதன் மூலம் சுவாசிக்கின்ற நல்ல சூழ்நிலை உண்டாக்கி விடுகிறது.

விடிவு எப்பொழுது!

1. சளி பிடித்துக் கொண்டால் என்ன செய்யலாம்? அதன் போக்கிலே விட்டு விட்டுத்தான் தீர்க்க வேண்டும். அவசரப்படக்கூடாது.

2. அதிகமான வலி, உடல் வேதனை மற்றும் தொடர்ச்சியாக இருமல் ஏற்பட்டுக் கொண்டே இருந்தால், மருந்துகள் சாப்பிடலாம்.

3. சில சமயம் காய்ச்சல் கூட ஏற்படலாம். அதற்காக கலங்கிப் போய்விடக்கூடாது. உரிய மருந்து சாப்பிட்டால்