பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்

69


சரியாகிவிடும். அருகில் உள்ள டாக்டரிடம் ஆலோசித்த பிறகு மருந்து சாப்பிடுங்கள்.

4. அதிகமான மருந்து சாப்பிட்டால் தான் சளி போகும் என்று அவசரப்படுவது அறியாமை. குறைந்த அளவு மருந்து சாப்பிட்டுத் தீர்ப்பதுதான் அறிவுடைமையாகும்.

5. நல்ல தூக்கம், நல்ல நிம்மதியான வயிறார உணவு, சளியைக் குணப்படுத்தும். ஆரஞ்சுப் பழங்கள். தக்காளி மற்றும் C வைட்டமின் உள்ள பழங்கள் நல்லது.

6. சளிக்குப் பிறகு இருமலும், தொண்டைப் புண்ணும் வரும். தேவையான மருந்தை சாப்பிடவும். ஆனால் நல்ல ஆரோக்கியமான உடல் இருந்தால், நிச்சயம் இந்தச் சளிவராது. அதற்கு ஒரே வழி உடற் பயிற்சி, அதைத் தொடர்ந்து நல்ல உறக்கம். சத்துள்ள உணவு.

சளியை சமாளித்து விடலாம். எப்பொழுதும் இயற்கையான வாழ்வு வாழ்ந்தால் ...!