பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7() டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா o 12. பல்லும் சொல்லும் பல்லும் பலமும் 'பல் போனால் சொல் போகும் என்பது பழமொழி. ஏன் அப்படிச் சொன்னார்கள் என்று ஆராய்ந்தால், அது எவ்வளவு அனுபவ பூர்வமான உண்மை என்பது நமக்குப் புலனாகும். பல் விழுந்து போனால் சொல் தெளிவாக வராது என்பது மட்டுமல்ல, பல்தான் உணவுப் பொருட்களை ஜீரணிக்க உதவுகின்ற உண்மையான உதவியாகும். பற்கள் தூய்மையாகவும் வலிமையோடும் இருந்தால்தான். உணவுப் பொருட்களும் அரைபடும். ஜீரண சக்தி பெருகும். உடலில் வலிமை நிறையும் வாழ்வும் சிறக்கும். வலிமை இல்லாத உடலிலிருந்து வரும் சொல் வலிமையோடு இருக்காது. வாழ்வு எப்படி வளமை இல்லாது போகுமோ அதுபோலவே வாய் மொழியும் வலுவிழந்து போகும். அதனால்தான் பல் போனால் சொல் போகும் என்பார்கள். பற்களும் எலும்பும் எலும்புகளும் பற்களும் தேய்ந்து போகாது என்பது சிலரின் கருத்து. அதனால் எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள்ளலாம் என்னும் நினைப்பில்தான் தங்கள் பற்களைப் பற்றிய அக்கறையும் போதிய கவனமும் இல்லாமல் பொறுப்பின்றி இருந்து விடுகின்றார்கள். மற்ற உறுப்புக்களைப் போலவே, பற்களும் எலும்பும் கழிவுப் பொருட்களால் நலிவடைகின்றன. அதனை