பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 71 so ஈடுகட்ட சத்தான உணவை உட்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. பற்கள் கெட முக்கிய காரணங்கள் இரண்டு என்பார். சத்தான உணவு வகைகளை சாப்பிடாமல், உடலின் சத்துப் பற்றாக் குறை ஏற்படுகிற போதும்; விலக்க முடியாத உணர்வெழுச்சிகளினால் (Tension) பாதிக்கப் படுகிற பொழுதும், உறுதியான பற்களும் கடினமான எலும்புகளும் பாதிக்கப்படுகின்றன. அதுவும் உயிர் வாழ் இனங்களுக்கு இந்த அழிவு வேகம் அதிகமாகவே இருக்கிறது என்றும் கூறுகின்றார்கள். பற்களும் பாதிப்பும் பற்கள் பாதிக்கப்படுகின்றன என்பதை எப்படி அறிவது? ஈறுகள் பாதிக்கப்படும்பொழுது. நாம் பல் விளக்கும் பொழுது ஈறிலிருந்து இரத்தம் கசிவது, ஈறு iங்கிக் கொண்டிருப்பது இரத்தச் சிவப்பாக ஈறு தெரிவது, சற்று உப்பியவாறும் தோற்றம் அளிப்பது. ஈறு வலிக்க ஆரம்பித்து வேதனையளிக்கத் தொடங்கியிருக்கிறது என்றால் பற்கள் பாதிக்கப்பட இருக்கின்றன என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஈறு பற்களை இழுத்து வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அது பாதிக்கப்படும் பொழுது பற்களை இழுத்துக் கட்டியிருக்கும் இறுக்கம் தளர ஆரம்பிக்கின்றன. கவனிக்காமல் விட்டு விடப்படுகின்ற ஈறு உபாதை இறுதியாக பற்களை விழச் செய்யும் காரணமாக அமைந்து விடுகின்றன. ஆங்காங்கே ஈறின் வலிமை கெடும் போது, உணவுத் துகள்கள் அவற்றின்மேல் தங்கிக் கொள்ளவும், அதனால்