பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பாக்டீரியா போன்ற நுண் கிருமிகள் அமர்ந்து வளர்ச்சி கொள்ளவும். இதன் மூலம் பற்களில் காறை படியவும் காரணமாகி விடுகின்றன. இதன் விளைவு இறுதியாக பல்லை இழந்து விடுவதுதான். பாதிப்பின் காரணங்கள் அண்மைக் காலத்தில் தான் பல் வியாதிகள் அதிகமாகத் தோன்ற ஆரம்பித்திருக்கின்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில், நான்கு பேர்களுக்கு மூன்று பேர்கள் விகிதம் ஈறு உபாதைகள் இருக்கின்றன என்று கணக் கெடுத்துக் கண்டுபிடித்திருக்கின்றார்கள். சத்தில்லாத உணவு சாப்பிடுவதனால்தான் இந்த உபாதை என்று நாம் கூறி விட முடியது. அவர்கள் சாப்பிடும் உணவு வகைகள் தான் காாணம் என்கிறார்கள். அதிகமாக இனிப்பை உணவில் சேர்த்துக் கொள்வதுதான். இனிப்புப் பண்டமானது அதிகமான அமிலச்சத்தை உண்டாக்கிவிட, அந்த அமிலச்சத்து சில மணி நேரத்தில் கூட, பற்களை கெடுக்கக் காரணங்களாக அமைந்து விடுகின்றன. அந்தக் காலத்து மக்களுக்கு அதிகப் பல்வியாதிகள் இல்லாததற்குக் காரணம். அவர்கள் சர்க்கரையையும் இனிப்புப் பண்டங்களையும் அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளவில்லை. என்பதுதான். இன்றைய இந்த வேதனைகள் இனிப்பினால்தான் ஆரம்பிக்கின்றன. பாதுகாப்பு முறைகள் 1. ஒவ்வொரு முறை உணவு உட்கொண்ட பிறகும். வாயை நன்றாக அலம்பிக் கொப்பளிக்க வேண்டும். உணவுத் துகள்கள் பற்களிடையே இருப்பதை அகற்றி விட வேண்டும்.