பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 73 2. கண்ட கண்ட பல் துரிகைகளைப் பயன்படுத்தக் கூடாது. மென்மையான பிரஷ்களைப் பயன்படுத்த வேண்டும். 3. விரும்பிய நேரத்தில் எல்லாம் சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்த்து விட வேண்டும். நேரத்திற்கு உண்பதும், உண்ட பின் பற்களை சுத்தம் செய்து விடுவதும் நல்ல பழக்கமாகும். 4. கோபப்படும் பொழுது அல்லது உணர்ச்சி வசப்படும் பொழுது பற்களைக் கடிப்பதும், சத்தம் உண்டாவது போல உரசிக் கொள்ளச் செய்வதும் தவறான முறையாகும். இதனால் தேய்வு மட்டும் ஏற்படவில்லை. பாதிப்பும் ஏற்பட, பற்கள் ஆட்டம் காணவும் நேரிடும் என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள். பற்களை இறுக்கிக் கடித்துக் கொள்வதன் மூலம் ஈறு நோய் ஏற்பட, பற்கள் ஆட்டம் காண்கின்றன. 5. தினந்தோறும் காலையில் பற்களைத் துலக்கும் பழக்கத்தை மேற் கொள்ள வேண்டும். கடினமான பொருட்களைக் கொண்டு பல்துலக்கக்கூடாது. பற்கள் வலிமை பெற பற்களை வலிமையாக வைத்துக் கொள்வதும், அப்படியே வளர்த்துக் கொள்வதும் புத்திசாலிகளின் பண் பாகும். பற்களைப் பலமாக வைத்துக் கொண்டாலே, பாதி வலிமையை நாம் பத்திரப் படுத்திக் கொண்டிருக் கிறோம் என்பது உண்மையாகிறது. 1. உணவு வகையில் வைட்டமின் சத்து மிகவும் வேண்டும் என்பார்கள். வைட்டமின் A சத்து குறையும்பொழுது, ஈறு வீக்கம் காண்கிறது. அதனால் பல் ஆட்டம் காண்பது போல இறுக்கம் தளர்கிறது. Cவைட்டமின் முறையினால் ஸ்கர்வி என்னும் உடல்