பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா சத்தின்மை நோய் வருகிறது. அதிகமான பழங்களும், காய்கறிகளும் 'சி' வைட்டமின் தருகின்றன. அவற்றை உண்டு ஈறினைக் காக்கலாம். 2. வைட்டமின் A என்பது, ஈறு வலிமை பெற உதவுகிறது. அத்துடன் ஈறினைத் தாக்கும் நோய் கிருமிகளிலிருந்தும் ஈறினை பாதுகாக்கின்றன. மாமிச உணவு மற்றும் முட்டை, மீன் இவற்றை உண்டால், நல்ல பல் சக்தியினைப் பெறலாம். 3. வைட்டமின் D சத்து கால்சியம் சத்தாகும். இந்தச் சத்தானது பற்களைச் சுற்றியுள்ள பரப்பளவை வலிமையாக்கும் மேன்மையுடையது. எலும்புச் சத்தை வலுப்படுத்தும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டியது மிக அவசியம். 4. புரோட்டின் சத்தானது பற்களை வளப்படுத்தும். திசுக்களை வலுப் படுத்துகிறது. எலும் புக் குழியில் பொருத்தப்பட்டிருக்கும் பற்களை இழுத்துக் கட்டிப் பிடித்திருக்கும் சக்தி இந்தத் திசுக்களுக்குத்தான் உண்டு. மாமிச உணவில் இந்தச் சத்து நிறையக் கிடைக்கிறது. வைட்டமின் மற்றும் இரும்புச் சத்துள்ள உணவு வகைகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொண்டால் ஈறுத் துன்பம் இறுதிவரை நமக்கு வராது. இனிப்புப் பண்டங்கள் அடிக்கடி உண்பதை நிறுத்துவதும், பல் பராமரிப்பு முறைகளும் நல்ல ஆரோக்கியமான வாழ்வை நமக்கு அளிக்கும். பல் சுகம்தான் நமக்கு நல் சுகம் என்பதை நாம் உணர்ந்து கொண்டால் போதும். அதுவே நமக்கு யானை பலத்தைக் கொடுத்து விடும் என்று நம்பலாம்.