பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 75 13. ஆஸ்த்மா மூச்சுத் தொல்லை மனித வாழ்வுக்கு அடிப்படை சுவாசம்தான். வெளியில் திரியும் காற்றை வாங்கி, மூக்கின் வழியாக உள்ளுக்கு இழுத்து, நுரையீரலை நிரப் பி வேண்டிய அளவுக்குப் பிராண வாயுவை பிடித்துக் கொண்டு, வேண்டாத கரியமில வாயுவை வெளி விடுவதுதான் சுவாசம். இயற்கையாக, எளிதாக, இனிதாக சுவாச வேலை நடைபெறும் பொழுது, சுகமாக பொழுது கழிகிறது. அந்தச் சுவாச வேலையில் தொல்லைகள் புகுந்தால்? H. H. 轟 அந்தத் தொல்லைக்குப் பெயர்தான் ஆஸ்த்மா. மூச்சுக் குழாய்கள் உள்ளுக்கிழுத்துக் காற்றை வெளியே தள்ள முடியாமல் கஷ்டப்படுவதுதான் இந்தத் தொல்லையின் எல்லையாகும். ஆஸ்த்மா என்பது நுரையீரல் தொடர்பான ஒரு நோய் என்றே நாம் கூறி விடலாம். எப்படி ஏற்படுகிறது? அடி வயிறு உள்ளே அழுந்த, அதற்கு மேற்புறமாக உள்ள உதர விதானம் (Diaphram) மேலே வர, அதனைத் தொடர்ந்து விலா எலும்புக் கூடுகள் வலிந்து கொள்ள, அதனுள்ளே பத்திரமாக இருக்கும் நுரையீரல் காற்றை நிரம்பிக் கொள்ள விரிந்து தயாராக, இப்படித்தான் சுவாச வேலை நடைபெறுகிறது. இவ்வாறு பணியாற்றும் மூச்சுக் குழலின் பாதை குறுகிப் போக, விரிந்து இயங்கும் நுரையீரல் தசைகள்