பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'நலமாக வாழ்கிறவர்களே பாக்கியவான்கள்' என்ற வாசகத்திற்கு உதாரணமாக நீங்கள் வாழ வேண்டும். பொன்னும் பொருளும், வீடும் மனையும், உடையும் உரையும், உறவும் உலகும், உடல் நலமாக இருந்தால் ரசிக்கும், ருசிக்கும், மதிக்கும்.

நோயாளியை யார் விரும்புவார்? உடல் வலிமை இல்லாதவனை தாயும் தாரமுமே விரும்பமாட்டார்கள் என்றால், நோயாளியை யார் விரும்புவார்?

நோயற்ற வாழ்வு வாழுங்கள். இந்நூல் அதற்கு உங்களுக்கு உதவினால், என் மகிழ்ச்சிக்கு அளவேது! உங்கள் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன்.

இந்நூலை அழகுற அச்சிட்ட கிரேஸ் பிரிண்டர்சுக்கும் உதவிய திரு. R. ஆடம் சாக்ரட்டீசுக்கும் நன்றி.

ஞானமலர் இல்லம் அன்பன்

சென்னை - 17. டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா