பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 77 4. சில சமயங்களில் நுரையீரல்களில் ஏற்படும் சீழ்க் கட்டிகள் காரணமாகவும் வருகிறது. 5. சில சமயங்களில் டான்சில்ஸ்' எனும் பாதிப்பு ஏற்படும் பொழுதும் ஆஸ்த்மா உண்டாகி விடுகிறது. 6. குழந்தைகளுக்குச் சாதாரண சளி இருமல் இவற்றிலிருந்து ஆஸ்த்மாவின் வெளிப்பாடுகள் கூட ஆரம்பமாகிவிடும். ஆஸ்த்மா வந்ததற்கான அடையாளம் நமக்கு நன்கு தெரியும்படி வெளிப்பட்டு விடும். மூச்சை உள்ளுக்கு இழுக்கும் பொழுது மிகவும் சிரமமாக இருக்கும் யாரோ நெஞ்சைப் பிடித்து அழுத்துவது போன்றிருக்கும். தேவையான காற்றை உள்ளுக்கு இழுக்க, பிரயத்தனம் படும்போது தோள்பட்டைப் பகுதிகளும், தோல் பாகமும், அதன் கீழுள்ள விலா எலும்புகளும் துடித்துப் போகும். இப் படி முயன்றும் தேவையான காற்று பெற முடியாமற் போனால், கழுத்தில் உள்ள சிறு இரத்தக் குழாய்களும் தடித்துப் போகும் நகங்களும், சில சமயங்களில் உதடுகளும் நீலம் பாய்ந்து தெரியும். சில சமயங்களில் இரு மல் ஏற்படும். காறித் துப்பினால் நன்றாக இருக்கும் என்று எண்ண எழுச்சி ஏற்படும். ஆனால் கோழையோ சளியோ வராது. காற்று நுழைந்து போக மூச்சுக் குழல் இடைவெளி குறுகியதாக இருப்பதால், சிறு இரைச்சல் ஒலியும்