பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா கேட்கும் பிரஷர் குக்கரிலிருந்து ஏற்படுவது போன்ற மெல்லிய விசில் ஒலி, காற்றுக்காக இதயம் வேகமாகத் துடிப்பதால், வியர்வை கொட்ட ஆரம்பித்துவிடும். இந்த வேதனை பகலை விட, இரவு நேரத்தில் சற்று அதிகமாகி வரும். தவிர்ப்பும் தடுப்பும் ஆஸ்த்மா என்பது தொற்று நோயல்ல. அருகில் சென்றால் ஒட்டிக் கொள்ளும். நம்மை மாட்டி விடும் என்று பயப்படுகின்ற அளவுக்கு அபாயம் நிறைந்த நோயும் அல்ல. இது ஒரு பரம்பரை நோய் என்றுதான் கூறுகின்றார்கள். தாய் வழி அல்லது தந்தை வழி ஒருவருக்கு இருந்தால், அது தொடர்ந்து வரும் குடும்ப நோய் என்று கூறுவாரும் உண்டு. ஆஸ்த்மா நோய் ஆரம்பக் கட்டமாக இருந்தால், அதை நிச்சயம் தடுத்து விடலாம், தீர்த்தும் விடலாம். கவனிக்காமல் விட்டு, <9/9Ы முற்றிப் போய் விட்டால், தவிர்க்க முயற்சிக்கலாம். தீவிரத் தாக்குதல்களிலிருந்து விடுதலை பெற்றுக் கொள்ளலாம். ஆனால் பூரண குணமாக்கி விடலாம் என்பதுதான் முடியாத காரியம் என்கிறது மருத்துவத்துறை. மூக்கடைப்பைத் தவிர்த்து சுமுகமாக்கி, நுரையீரல் குழாயின் பாதையை சற்று விரிவாக்கித் திறந்து விடுகிற மருந்துகள்தான் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றனவே தவிர, முற்றிலும் குணமாக்கி விடுகின்ற மருந்துகள் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.