பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 79 வருமுன் காப்பது ஒரு கலை. ஆனால் ஆஸ்த்மா வந்த பின், ஒரு சில பழக்கங்களைத் தொடர்ந்து கடைபிடித்து வந்தால், இதன் அதிகத் தாக்குதல்களுக்கு ஆளாகாமல் வாழ்ந்து விடலாம் சில தடுப்பு முறைகள் 1. இரவில்தான் இதன் கடுமை அதிகம் என்பதால், தலையணைகளை உயரமாக வைத்துக் கொண்டு படுத்தால், மூச்சிழுத்து விட சற்று எளிதாக இருக்கும். 2. பகலென்றால், சுத்தமான காற்று வரும் பகுதியில் இருந்தால், ஆழ்ந்த மூச்சிழுத்துக் கொண்டு, தெளிவடையலாம். 3. அதிகமாக வெந்நீர் அருந்தலாம். இது சளியைக் கொஞ்சம் கட்டுப் படுத்தி, மூச்சு விட, இழுக்க வழி வகுக்கும். 4. சாதாரண ஆஸ்த்மா தாக்குதல் என்றால், எபிடிரின் (Ephedrine) . 9J6ö @5] ®(3uTl ? 6íói (Theophylline) கொடுத்தால் சரியாகும். 5. கொஞ்சம் கடுமையான தாக்குதலாக இருந்தால், அட்ரீனலின் (Adrenalin) இஞ் செக்ஷன் செய்யலாம் என்கிறார்கள். 6. ஆஸ்த்மா தாக்குதலினால் காய்ச்சல் ஏற்பட்டு, அதுவும் மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்திருந்தால், சளி கட்டியாகவும் மஞ்சளாகவும் வரும். அப்பொழுது அதனைத் தடுக்க டெட்ராசைகிளின் (Tetracycline) தரலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.