பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இதற்கும் மேலே ஆஸ்த்மா தீராவிட்டால், நல்ல மருத்துவர்களை அணுகுவதே சிறந்த வழியாகும். சில குறிப்புக்கள் ஆஸ்த்மா உள்ளவர்கள் மிகவும் ஜாக்ரதையுடன் வாழ்ந்து வரவேண்டும். அதாவது ஆஸ்த்மா விஸ்வரூபம் எடுக்காதவாறு பார்த்து வாழ்ந்து கொள்ள வேண்டும். 1. குளிர்ந்த நீரை அருந்தக் கூடாது. 2. இரவில் பனியில் மற்றும் மழையில் நனையக் கூடாது. 3. வியர்வை கொட்டும் வேலைகளில் ஈடுபடக் கூடாது. 4. ஆஸ்த்மா தாக்குதலை ஏற்படுத்தும் என்கிற அலர்ஜி தரும் உணவு வகைகளை அறவே தவிர்த்து விட வேண்டும். 5. அதுபோலவே, மூச்சடைப்பை ஏற்படுத்துகின்ற நாற்றப் பகுதிகளில் செல்வதைத் தவிர்த்து விட வேண்டும். 6. வீடு அல்லது வேலை செய்யும் இடம் புழுதி கிளம்பாத இடமாக, தூய்மையாக இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். 7. படுக்கை அறை காற்றோட்டம் நிறைந்த இடமாக இருப்பது நல்லது. 8. ஆஸ்த்மா உள்ளவர்கள் புகைக்கும் பழக்கத்தை விட்டு விடுவது நல்லது. புகைப்பது ஆஸ்த்மாவை அதிகப் படுத்தி விடும்.