பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா பயிற்சி செய்ய எத்தனையோ வழிகள் உள்ளன. மனம் உண்டானால் மார்க்கம் உண்டு. உடல் நலம் பேண ஒரே வழி உடற்பயிற்சிகள்தான் என்றால், அது உண்மைதான். இதை விட்டால் வேறு வழியில்லை வேறுகதி இல்லை. வேறு விமோசனமே இல்லை. பயிற்சி செய்பவர்களுக்குக் குழந்தைகளின் சுறுசுறுப்பு, மேதைகளின் அறிவுக் கூர்மை, பயில் வான்களின் பலம், நண்பர்களின் ஒத்துழைப்பு, போன்ற பண்புகள் எல்லாம் உடற்பயிற்சியாளருக்குக் கிடைக்கிறது. ஒருமுறை செய்துபாருங்கள். உண்மை புரியும். ஏனென்றால், உடற் பயிற்சியெல்லாம் சொல்லால் செய்யப்படுவதில்லை செயலால் தான் நடக்கும். அந்த இனிய செயலை இன்றே செய்யுங்கள். சுகமாக வாழுங்கள்.