பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 95 offl o - முக்கியமான குறிப்பாகும். ஆசனங்கள் செய்யும்போது பிராணாயாமம் என்று சுவாசிப்பைப் பற்றிக் கூறுவார்கள். பிராணன் என்றால் காற்று. யாமம் என்றால் கட்டு என்பது பொருளாகும். அதாவது காற்றை நெஞ்சுக்குள் நிறைத்து வைக்கும் வித்தைதான் பிராணாயாமம் என்பதாகும். நாம் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதில் பெருமை இல்லை. நாம் எத்தனை நாட்கள் சுகமாக வாழ்கிறோம் என்ற தரமான வாழ்வு முறைதான் நம் வாழ்க்கையின் இலட்சியமாகும். காலைக் கடன்களை முடிப்பது, பல் விளக்குவது, குளிப்பது, உடை உடுத்துவது. உண்பது என்பதெல்லாம் அன்றாடக் கடமைகளாகும். இதற்கெல்லாம் நமக்கு நேரமில்லை என்று ஒதுக்கி விடுவதில்லை. அவற்றைப் போலவே உடற்பயிற்சியும் ஒன்று என்று நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் செய்தால்தான் உடற் பயிற்சி என்பது புரியாத தனம். ஒரு நாளைக்கு ஒரு ஐந்து நிமிடம் போதும். வேகமாக நடக்கலாம், மெதுவாக ஒடலாம் (logging) நின்ற இடத்திலே ஒடலாம், (Running on the spot). 5;u?pJ 5İT@šîl§ § (35@ő5@fti ĥ. (Rope Skipping) கால்களை நீட்டி, கைகளை உயர்த்தி உட்கார்ந்த இடத்திலே செய்யலாம். வீட்டிலே ரேடியோ கேட்கும் பொழுது அல்லது இசை முழங்கும் போது, அதற்கேற்றவாறு உடலை இயக்கலாம்.