பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா இந்த உண்மையை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றார்கள். அப்படி யென்றால் எந்தப் பயிற்சியைச் செய்வது, இதற்குப் பதில் எளிது. எந்த விதமான பயிற்சி உங்களுக்குப் பிடிக்கிறதோ, அந்தப் பயிற்சியையே நீங்கள் செய்யலாம். எல்லா சாலைகளுமே ரோம் நகரை நோக்கித்தான் செல்கின்றன என்பது ஒர் ஆங்கிலப் பழமொழி. அதுபோலவே, எல்லாவித பயிற்சிகளும், உடல்நலம் என்ற உன்னத இலட்சியத்தை நோக்கியே உழைக்கின்றன. பல்வேறு ©Ꭻ Ꮆö❍ &5 ᏓᏞᎫ fᎢ©ᏈᎢ உடற் பயிற்சிகள் இருக்கின்றன. இந்திய நாட்டில் செய்யப்படும் யோககாசனங்கள் ஒருவகை, தண்டால் பஸ்கி என்பது ஒருவகை. கைகளை கால்களை இயக்கி மூச்சிழுத்துப் பயிற்சி செய்யும் வெறுங்கை பயிற்சிகள் ஒருவகை. பலவகை எடையுள்ள சாதனைகளைத் துக்கி உடலைப் பலப்படுத்தும் வலுப் படுத்தும் எடைப் பயிற்சிகள் ஒருவகை. சீன முறையில். ஜப்பான் முறையில் அந்தந்த நாட்டிலே உலவும் பயிற்சி முறைகள் என்று பலவகை உள்ளன. நாம் செய்கின்ற பயிற்சிகள், உடல் நலத்திற்காகத் தான். மேடையேறி சண்டைப் போட அல்ல. உடல் தசைகளைக் குவித்து, பயில்வானாக நடைபோட அல்ல. இதமாக ஒரு தேக நலத்தை இரட்டிப்பாக்கி, வாழ்வை இனிமையாக ஆக்கி வாழத்தான். எல்லா உடற் பயிற்சிகளுமே மூச்சினை அதிகம் சுவாசிக்கின்ற வகையில் அமைந்திருப்பதுதான் ஒரு