பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 93 எந்த உறுப்புக்கள் அதிகம் இயங்குகின்றனவோ, அவைதான் உறுதியடைகின்றன, வளர்கின்றன என்பது இயற்கைத் தத்துவம். இந்தத் தத்துவத்தின் அடிப்படையில் தான் உடற் பயிற்சிகள் உழைக்கின்றன. உதவுகின்றன. 'எனக்கு உடற்பயிற்சி செய்யவே நேரம் இல்லை என்பார் சிலர். எனக்கு உடற்பயிற்சி செய்யும் வயது கடந்து விட்டது' என்று நழுவப் பார்ப்பார் சிலர். உடற் பயிற்சி செய்யும் அளவுக்கு அப்படி ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை என்று கோடிட்டு காட்டுவார் பலர். எப்படியோ தப்பித்துக் கொண்டால் போதும். தவிர்த்து விட்டால் போதும் என்று உடற் பயிற்சிகளை ஒதுக்கு பவர்கள்தான் உலகத்தில் அதிகம். காரணம் என்ன? உடற் பயிற்சியைப் பற்றி புரிந்து கொள்ளாததால்தான். உடற் பயிற்சி இதமானது, சுகமானது, இனிமையான இயக்கங்களை உடையது. சுவையான செயல்களை உடையது. தன்னம்பிக்கையை வளர்ப்பது நிமிர்ந்து நிற்கும் தோற்றத்தை அளிப்பது. வைக்கின்ற ஒவ்வொரு அடியும் வாழ்வின் முன்னேற்றத்தை நோக்கி அழைத்து செல்வது. ஆமாம்! உடற்பயிற்சி செய்கிறவர்கள் அனைவரும் ஒப்பற்ற தன்னம்பிக்கையுடனே வாழ்கிறார்கள், ஒவ்வொரு நிமிடத்தையும் இன்பமாகப் போக்குகின்றார்கள். பிறருடன் கலந்து உறவாடுகின்ற பெருந்தன்மையையும், பிறரைக் காக்கின்ற பேராண்மையும் உடையவர்களாகத் திகழ்கின்றார்கள்.