பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 'தூங்கும் போது வாங்குகிற மூச்சு, வாங்காமல் போனால் எல்லாமே போச்சு என்று கிராமத்து மக்கள் பாடுவார்கள். இந்த உயிர் காக்கும் காற்றை, ஒரேயடியாக சேமித்தும் வைக்க முடியாது. இன்றைக்குக் கொஞ்சம் அதிகமாக சுவாசித்து. நாளைக்குக் கொஞ்சம் குறைவாக சுவாசிக்கலாம் என்று குறைத்துக் கொள்ளவும் முடியாது. எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாகக் காற்றை உள்ளுக்கு இழுக்கிறோமோ, அந்த அளவுக்கு நிறைய காற்றை நுரையீரல் இரத்த அணுக்கள் உற்சாகத்துடன் வாங்கிக் கொள்கின்றன. இரத்த ஒட்டம் விரைவு பெறுகிறது. உடலில் உள்ள உறுப்புக்கள் இரத்தத்தின் மூலமாக உயிர்க்காற்றைப் பெற்று செழிப்படைகின்றன. அதனால் உறுப்புக்கள் பலமடைகின்றன. வளமடை கின்றன. காற்றினை நிதமும் நிறைய பெறுவது எப்படி? அந்த அற்புத செயலுக்கு அனுதினம் உதவுவதுதான் உடற் பயிற்சிகளாகும். உடற்பயிற்சிகள் என்பது உடல் உறுப்புக்களை இயக்குவதன் மூலம், உள்ளுக்கு அதிகக் காற்றை சுவாசிக்கச் செய்வதுதான். உடற்பயிற்சிகள் என்றால், உறுப்புக்களை முறுக்குவது, உறுப்புக்களை தொந்தரவு படுத்தி சிதைப்பது என்றெல்லாம் பலர் எண்ணிக் கொண்டு பயப்படுகின்றார்கள். உடற்பயிற்சி என்பது உடலைப் பதப்படுத்துவது, இதப்படுத்துவது, மசாஜ் செய்வது அதாவது பதமாக பிடித்து விடுவது.