பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள் 9 | போதும். ஒடிவரும் நோய்க் கூட்டம் தானாகவே ஒதுங்கிக் கொள்ளும். இன்பமான ராஜபாதைதான் நமக்கு எதிரே இருக்கும். உடலை வலிமையாக மாற்றிக் கொண்டு வாழ வேண்டுமானால், முதல் தேவை உணவு. அதுவும் சத்துள்ள உணவு. சரிவிகித உணவு. அது மட்டும் போதாது. உடலைப் பதப்படுத்தும் பயிற்சிகள். அவை தான் உடற்பயிற்சிகள். மனித உடல் உழைப்பதற்காகவே பிறந்தது. புனிதமாக, தூய்மையாக அதை நாம் காக்க வேண்டாமா? உட்கார்ந்து, ஒய்வெடுத்துக் கொண்டு, உண்டு, உறங்கி வாழ்ந்தால் போதும் என்று நம்பி வாழ்கின்றவர்களே நால் வகைப் பட்ட நோய்களுக்கும் ஆளாகின்றனர். அவதிப்படுகின்றனர். உழைக்கின்ற தேகமே இன்பம் சுரக்கின்ற இனிய சுனையாக இருக்கின்றது. உழைத்து மகிழும் தேகமே உரமாகவும் திறமாகவும் திகழ்கிறது. உழைப்பால் வாழ்பவர்களே உல்லாசமாக வாழ்கின்றார்கள். எப்படி? நமது உடல் இரத்தத்தாலும், தசையாலும், நரம்பு களாலும் எலும்புகளாலும் ஆனது. எல்லாவற்றிற்கும் அதிகத் தேவைப்படுவது காற்று. அதாவது உயிர்க் காற்று அதைத்தான் பிராணவாயு என்கிறோம். பிராணனைக் காக்கின்ற பரந்து திரியும் காற்றைத்தான் நாம் தினந்தினம், நொடிக்கு நொடி உள்ளுக்குப் பெற்றுக் கொள்ள வேண்டியவர்களாகின்றோம்.