பக்கம்:உபயோகமுள்ள உடல்நலக் குறிப்புகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா நோய் வந்த பிறகு, வாய் புலம்பிய பிறகுதானே உடலை நினைக்கத் துடிக்கிறது. நோயைப் போக்கி விட்டு, மீண்டும் க.க வாழ்வைப் பெற சுற்றிச் சுற்றி அலைகிறது நமது மனித இனம்! அலைபாயும் இந்த மனித மனம். இதை அறியாமை என்று மட்டும் சொல்லிவிட முடியாது அலட்சியம் என்று சொல்லலாம். அறிவுத் தனம் மிகுந்த அகம் பாவம் என்றும் கூறலாம், இன்னும் சொல்லப் போனால், எல்லையற்ற கர்வம் மிகுந்த தன்னம்பிக்கை என்றுகூட நாம் பேசலாம். ஏனெனில், நமது உடல் நல்ல உடல், நோயே வராத உடல் என்று தன்னம்பிக்கையுடன் வாழ்வதுதான் காரணமாகும். அதனால் தான் வள்ளுவரும். 'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை, எரிமுன்னர் வைத்துறு போலக் கெடும்' என்று பாடினார். எதையும் வந்தபின் தடுப்பது பேதமை. வரும் முன்னர் வாராமல் காப்பதுதான் அறிவுடைமை என்று நாம் கருதலாம். நோய் வராமல் காப்பது எப்படி? அதற்கு முன் நாம் ஒரு விளக்கத்தைக் காண்போம். நோய் என்றால் என்ன? உடல் நலிவு. அதாவது, இனிமேல் உன்னுடன் ஒத்துழைக்க முடியாது. என்னால் இயலவில்லை. என்று உடல் உழைக்க மறுக்கிறதே. அதற்குப் பெயர் தான் நோய். வலிமையற்ற உடல்தான் அடிக்கடி நோய் வாய்ப் படும். உடலை வலிமையாக மாற்றிக் கொண்டாலே