பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்காம் வாழ்வும்-இலக்கியமும்

மதங்கள் காட்டும் வழியில் ஒருவன் மனத்தைச் செலுத்தி ஆய்கிறான், புதிர்களுக்குள் ஒருவன் நிலைத்த தன்மை புகுந்து காண்கிறான், “இதுவும் இல்லை அதுவும் இல்லை முட்டாளே கேள்”எனச் - செதுக்கும் மொழிதான்் செவியில் வீழும் நாள்கள்தொலைவில் இல்லையே. 220

காலத்துரதர் வெட்டிப் பேச்சைக் காதில்வாங்கிக் கொண்டிடேல், கோலமாதர் குடத்தின் மதுவைக் கொணர்ந்து வார்க்கக் கூப்பிடு, காலங்காலமாக வந்தோர் கடந்து தொடர்ந்து மாய்ந்தனர், ஞால மீதில் திரும்பிவந்தோர் எவரையும்நாம் கண்டிலோம்.

துறவிக்கோலம் பூண்டு பொய்மை வாழ்க்கை நடத்தல் தன்னினும் நறவருந்தி நண்பரோடு மகிழ்ந்திருத்தல் மேலதே. உறவில் மகிழும் காதலர்கள், குடியர் தீயர் என்பமேல் துறக்கநாட்டை எவரும் காணார் துறக்கம் வெறுமை ஆகுமே.

களிப்பு மிக்க நெஞ்சகத்தைக் கவலையாலே தளர்த்திடேல், களிப்பும் பருவக் கனிகள் தம்மை இன்னல் கல்லால் தாக்கிடேல், ஒளிந்திருக்கும் எதிர்காலத்தை எவரும் அறியார் - ஆன்சகொள், தெளிவைக் காதற் பெண்ணை மற்றும் தேவை யாவும் நுகர்த்திடு.