பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமக்குப் பட்டமோ பதவியோ வேண்டுமென்று விரும்பவில்லை. “உன் அதிர்ஷ்டத்தின் நிழலிலே எனக்கு ஒரு மூலையில் வசிக்க இடம் கொடுத்து விடு. நான் அங்கே இருந்துகொண்டு என் சாஸ்திர ஞானத்தைப் பரப்புவேன். உன் ஆயுள் - ஆரோக்கியத்தைக் குறித்துக் கடவுளிடம் பிரார்த்தனை செய்வேன். இதுவே நான் எவ்வளவோ வேண்டியும், அவர் எந்தப் பதவியையும் பெற ஆசைப்படவில்லை. உண்மையில் உமர் பற்றற்றவர் என்பதைக் கண்ட மந்திரி, அவரை மேலும் வற்புறுத்தாமல், நைஸாப்பூர் பொக்கிஷத்திலிருந்து அவருக்கு வருஷத்துக்கு ஆயிரத்து இருநூறு மித்கல்கள் (பொன். நாணயங்கள் கொடுக்கும்படி ஏற்பாடு செய்தான்.

“உமர்கயாம் பதினோராம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றியவர்: கி.பி. 123ல் அவர் மறைந்ததாகச் சொல்லப்படுகிறது.

“உமர்கயாம் வான சாஸ்திரத்தில் மகா நிபுணர். மலிக் ஷா சுல்தானாக இருந்தபோது அவர் சுல்தானிடம் வந்து அரிய சன்மானங்களைப் பெற்றார். மலிக் ஷாт புதிதாகப் பஞ்சாங்கம் கணிக்க வேண்டுமென்று கருதியபொழுது அதற்காக நியமிக்கப்பட்ட எட்டுப் பேர்களடங்கிய சபையில் உமரும் ஸ்தானம் பெற்றார். அவர்தான் ஜலாலி சகாப்தத்தை ஆரம்பிப்பதற்குக் காரணமாக இருந்தார். ‘ஜீஜி மலிக் ஷாஹி’ என்ற வான சாஸ்திர விஷயமான கணக்குகள் கொண்ட ஒரு புத்தகத்தையும் அவர் இயற்றினார்.

“கயாம் என்பது அவருடைய புனைபெயர் ‘கூடாரம் கட்டுபவன்’ என்பது அதன் பொருள். நிஜாம் - உல் -