பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முல்கினிடம் புகழ் பெற்றுச் சுதந்திரமாக வாழ்வதற்கு முன்பு கூடாரம் கட்டுவது அவருடைய தொழிலாக இருந்திருக்குமென்று யூகிக்கலாம். ஏனெனில் அந்தக் காலத்திய கவிகள் தம் தொழில்களுக்கு ஏற்பவே புனைபெயர்கள் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வேளை கூடாரம் கட்டும் தொழிலை உமரின் தந்தையார் செய்து வந்திருக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள். உமர் கயாம் பாடல்கள் புனைந்ததோடு, பயிர்த் தொழிலும் செய்து வந்தார் என்பது அவர் கவிதை களிலிருந்து தெரிகிறது.

“உமரின் சிஷ்யர்களில் ஒருவாராக க்வாஜா நிஜாமி என்பவன் அடிக்கடி அவரிடம் வந்து டிேசிப்போவது வழக்கம். அவனுடைய சொந்த ஊர் ஸமர்கந்த். ஒரு நாள் அவர்கள் இருவரும் தோட்டத்தில் சம்பாஷித்துக் கொண்டிருந்தபொழுது, உமர் அவனிடம், ‘வடக்கத்தி காற்று ரோஜா மலர்களைக்கொண்டு வந்து தூவும் இடத்தில் என் சமாதி இருக்கும்’ என்று சொன்னாராம். எத்தனையோ வருஷங்கள் கழித்து க்வாஜா மீண்டும் நைஸாப்பூருக்குப் சென்று தன் ஆசிரியரின் சமாதியை அங்கே கண்டான். அது ஒரு தோட்டத்துக்கு வெளியே இருந்தது. பழங்கள் குலுங்கும் மரக்கிளைகள் தோட்டத்துக்கு வெளியே இருந்தது. பழங்கள் குலுங்கும் மரக்கிளைகள் தோட்டத்து மதிள் சுவரில் படர்ந்திருந்தன. அவருடைய சமாதி மறைந்து போகும்படியாக மரங்கள் மலர்களைச் சொரிந்து கொண்டிருந்தன.

“உமர்கயாம் நாஸ்திகவாதி. அவருடைய ‘ருபயாத்’ பாரசீகக் கவிதையில் ஒரு புது மாதிரி. இந்த உலகமே அவருடைய சொர்க்கம். விதியில் அவருக்குப் பூரண