பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம் வாழ்வும் இலக்கியமும்

அழிம்பன் ஒருவன் ஒரிடத்தில் அசைவிலாமல் இருந்தனன், செழிக்கும் உலகு, கடவுட் பற்று, நம்பிக்கை மற்றின்மையால் விழிப்புணர்வு கடவுள் அறம் விதி அவனுக்கு இல்லையாம், உறுதிப்பாட்டில் இவனைப் போலும் மண்ணில் விண்ணில் யாருளார்? நம்மையெல்லாம் விழிப்பில் ஆழ்த்தும் . நகரும் கோளை ஆய்நிதிடில் செம்மையான ஒளியின் வண்ணச்சித்திரக் காட்சியேகொலாம் செங்கதிர்தான்் கொழுவிளக்கு, வையம் ஒளியின் கூண்டுகாண் இங்கு நாமோ சுவரில்தெரியும் சுழலும் நிழல்கள் ஆகிறோம். 105

எல்லாம் நம்மை வெறுமையாக விட்டு விட்டுச் செல்வதால் எல்லாவற்றின் பயனும் என்ன? இழப்பும் அழிவும் இரண்டுமே இல்லா ஒன்றே உலகில் என்றும் இருப்பதாக உள்ளது, உள்ளதென்று கொள்வதேதும் உலகில் இல்லை இல்லையே.

இந்த உலகில் எந்த ஒன்றையும் நான் எய்தவில்லையே என்றன் வாழ்வில் உழைப்பை தவிரப் பெற்றதொன்றும் இல்லையே குந்தும் விருந்தின் விளக்கு நானே அமர்ந்தால் ஒன்றும் இல்லையே மொந்தை யும்.நான் உடைந்த பின்னர் முற்றுமாக இல்லையே.