பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*—toirewirio wisgard &loščinićpo

காலம் எனது முதுகை வளைக்கச் செயல்கள் யாவும் சிதைந்தன, கோல வாழ்க்கை என்னை விட்டுச் செல்ல அணிய மானதே. ஏல என்னை நீங்கிடாதே என்றேன், சொன்ன விடையிது: வேறே என்ன செய்ய முடியும் வீடிடிந்து வீழ்கையில்?

வண்ணின் கோள்கள் சுழற்சி பற்றி விரிந்தறிந்தார் இல்லையே, மண்ணும் மாந்தர் தம்மைத் தின்றும் மனத்தில் நிறைவு பெறவில்லை, இன்னும் உன்னைத் தின்னவில்லை என்று பெருமை கொண்டிடேல், ஒன்றும் விரைந்து பேச வேண்டா; உன்னை நாளை உண்ணலாம்.

நானிலாமல் எனது வாழ்வை எழுத விதிக்கோல் முனைந்தது, ஏன் அதன்தன் நன்மை தீமை என்றன் மீது சுமந்திடும்? நான் இலாமல் நேற்றும் இன்றும் விதியும் தான்ே எழுதிற்று நாளை முறை மன்றில் என்னை நிறுத்தச் சான்றும் ஏதடா? வண்ணம் மணத்தில் கவர்ச்சி கொண்டே எத்தனை நாள் வாழ்குவான்? கண்கொள் வனப்பில் அருவருப்பில் காக்கும் காலம் எத்தனை? மண்ணகத்தில் புனிதநீராய், உயிரின்ஊற்றாய் நிற்பினும் மண்ணுக்கடியில் ஒருநாள் நீயும் ஆழ்தமிழ்ந்து போவையே. 175

86 த. கோவேந்தன்