பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

e-wiraswiriö ontgarto Slošálw'Épin

வளர்ந்து முதிர்ந்த மூத்தரோடு வாழும் இளைஞர் தாமுமே உளம்கொள் போக்கில் அவர் அவர்தம் நோக்கில் விரைந்தே ஒடுவர் தளர்ந்துபோன பழைய உலகம் யார்க்கும் நிலையேறல்லவே அவர்கள் சென்றோர், நாமும் செல்வோம், அடுத்தும் வருவார் செல்வரே.

ஒருவன் இங்குத் திணிக்கப்படுவான், ஒருவன் எறியப்படுகிறான், ஒருவருக்கும் வாழ்வின் கமுக்கம் உணருமாறு இங்கில்லையே, உருவெடுக்கும் ஊழ்வினை நமக்களித்த வாழ்வெலாம் குறுகலான, நிலையிலாத புன்மை வாழ்க்கை தான்டா. இன்னல் ஏற்கும் மாந்தர் தம்மை ஏற்றம் செய்து உயர்த்திடும், விண்ணிர் சிப்பிச் சிறையிலுற்று விளைந்து முத்தாய் ஆனதாம், மண் நலங்கள் அழிந்த போதும் மனத்தைக் கிண்ணி ஆக்கிடு, கிண்ணி வெறுமை ஆகும் போதில் மீண்டும் நிரப்பப்பட்டிடும். 170

கழிபேரின்பம் தேடும் உனது கட்டிலாத அறிவுதான்் - எழுந்தெழுந்து மீண்டும் மீண்டும் இந்த ஒன்றை இயம்பிடும்: நழுவிடாமல் கிடைத்த வாழ்வும் பொழுதை நன்கு பற்றிக்கொள் - கொழுந்தைக் கிள்ள வெட்டத் தளிர்க்கும் குணங்கொள் கொடி அஃதல்லவே.

85 த. கோவேந்தன்