பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

لج

2—ioirætuiriö_euirgaltó இலக்கியமும்

ஏயும் ஆசை வித்தும் ஒன்று களத்து மேட்டில் இருந்திடும் நீயும் நானும் சென்ற பின்னர் நிற்கும் தோட்டம் அரண்மனை, வாய்த்த பொன்னைச் செப்புக்காசை நண்பர்க்கு அனைத்தும் வழங்கிடு ஈயும் இன்பம் ஆற்றுப்போனால் பகைவர் கொள்வர் அப்பணம். நூறு நெஞ்சம், சமயம் நிகர்க்கும் ஒற்றைக் கிண்ண மதுவடா, வீறு மிக்க ஒரு மடக்குக் கிணையாம் சீன ஆள்நிலம் நூறு நூறு நெஞ்சங்களுக்கு ஒப்ப இந்த உலகினில் வேறு எந்தப் பொருளுமில்லை சிவந்த எமதுவை அன்றியே. ஒரு துண்டப்பம் வீறல் விழுந்த பானையில் ஒர் துளித்தண்ணிர் ஒருவனுக்காய் இரண்டு நாட்குக் கிடைக்குமாயின் வெட்கமே! ஒருவன் நீ ஏன் உன்னின் தாழ்ந்தார் உனக்கு நிகராய் உள்ளவர் இருவருக்கும் ஊழியம் நீ ஏன் புரிதல் வேண்டுமே? - - - சிவந்த மதுவை எளிய பளிங்குக் குவளையில் நீ கொண்டு வா, உவப்பளிக்கும் தோழியோடு நண்பனையும் அழைத்து வா, தவழ்ந்திடாமல் உலகில் நாள்கள் காற்றைப் போல விரைவதால் இவணிருக்கும் வரையில் இன்பம் எய்த மதுவைக் கொண்டு வா. 195

93. த. கோவேந்தன்