பக்கம்:உமர் கயாம் வாழ்வும் இலக்கியமும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமர்கலாம்-வாழ்வும் இலக்கியமும்

நண்பனே, இறைமை பற்றி என்ன உனக்கு வேலையே? எண்ணும் நெஞ்சம் ஆவியற்றி ஏனோ பூசல் கருத்தினால்? மண்ணுலகத்தை மகிழ வைத்துக் களிப்பினோடு வாழ்ந்திடு, உன்னை மனத்தில் கொண்டிங்கு உலகில் ஒன்றும் தொடங்கவில்லையே.

பாழாய்ப்போன உலகைக் குறித்துக் கவலை கொள்ளேல் நெஞ்சமே, மேலாம் நோக்கம் கொண்டுளாய் நீ வேண்டாத் துயரம் கொண்டிடேல், போனதென்ன, இருப்பதென்ன புரியவில்லை; களித்திரு, ஆனதென்ன, ஆவதென்ன அறிதற்கில்லை மகிழ்ந்திரு. உலகின் சூழ்ச்சி வழிகள் எல்லாம் வெல்லப்பட்டது அறிகுவாய், நலமிகுந்த இன்பத் தோட்டம் பசுமை வண்ணம் பூண்டது மலரும் புல்லின் நுனிசேர் பணிபோல் மகிழ்வாய் இரவில் தங்கிடு, புலரும் பொழுதும் போந்ததிங்கே புத்துணர்வில் பூத்திடு. இறந்த பேர்கள் இந் நிலத்தில் மண்ணுயித் தாசாய் மாறினார், சிறி துணுக்கும் உறவிலாமல் தனித்துச் சிதறிப் போனது, இறக்கும் வரையில் ஏந்தி உண்ட மதுவின் வகைகன் என்னவோ? மறந்தெழிந்து போன அவரின் மதியும் உணர்வும் மண்ணிலே.

94 தி. கோவேந்தன்