இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
111
அவன் கண்கள் பதிந்தன. அருகில் வந்து அதை நன்றாக உற்றுக் கவனித்தான். நட்சத்திரங்கள் இருக்கும் இடங்களின் எடுத்துக்காட்டுக்கள் அதில்வலை பின்னியது போல் சிறுசிறு உருவங்களில் வரையப்பட்டிருந்தன.
எத்தனையோ பேர் அந்த உருண்டையைப் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். பழைய கோடுகளையும், புதிதாக அதில் சேர்க்கப்பட்டிருந்த கோடுகளையும் உமார் கவனித்தான். அடிவானத்தை நோக்கி வலப்புறத்தையும், இடப்புறத்தையும் கவனித்துவிட்டு உமார், பூகோள உருண்டையை மெதுவாகச் சுற்றிக்கொண்டு வந்து, தன் தலைக்கு நேரே உள்ள வானத்தோடு பொருந்தும் நிலைமையில் அதை நிறுத்தினான். பொத்தானைத் தடவி, அழுத்தி அந்த நிலையில் அதை நிலைபெறும்படி செய்தான்.