பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224


துன்பம் நேர்கையில் பூங்கொடியான அவளுக்கு நூறு பொன்தான் பெறுமதியா” என்று நீதிபதியிடம் நியாயம் கேட்பவன் போலப் பொதுமக்களை நோக்கிக் கேட்டான். “இதற்கு மேல் யாரும் கேட்கவில்லையா?” என்று கூறித் தன்னுடைய கையாளை நொக்கினான்.

விலையை உயர்த்தி விடுவதற்காகவே கூட்டத்தின் இடையில் இருந்த அந்த மனிதன், நூற்றுப்பத்துப் பொன்” என்று கூவினான்.

நெடுநேரம் அங்கே நிற்கவும், ஏலம் கேட்டுக் கொண்டிருக்கவும் விரும்பாத உமார் கயாம், “சரி இரு நூறு பொன் தருகிறேன்! பிறகு என் வீட்டிலே வந்து வாங்கிக் கொள். நான் இவளைக் கூட்டிக் கொண்டு போகிறேன்” என்று ஆவேசத்தோடு கூறினான்.

எழுபது பொன்னுக்கு ஏலத்தில் விடுவதே அரிய காரியம். அந்தப் பெண்ணுக்கு இருநூறு பொன் விலை கிடைக்கிறது என்றவுடன், ஏலவியாபாரி திடுக்கிட்டுப் போனான். “மத நம்பிக்கையுள்ள மக்களே நம்முடைய அரும் பெரும் தலைவரான இந்த கனவானுக்கு எவ்வளவு தாராள மனப்பான்மை! எத்தனை தேர்ச்சி எவ்வளவு கலை ஞானம் மிகுந்தவர் என்று பார்த்தீர்களா? இப்பொழுது, பாடும் குயிலான அயீஷா என்ற அடிமைப் பெண்ணை குவாஜா உமார் அவர்களுக்கு இரு நூற்றி. என்று இழுத்தவன் “மீண்டும் கூட இருபது பொன் கொடுத்தால் மசூதிக்கு ஐந்து பொன்னும் மீதிப் பதினைந்து பொன் எனக்கு ஏதாவது சில்லறைச் செலவுக்கும் பயன்படும். தாராள மனப்பான்மையுள்ள பிரபுவே, “இந்தப் பாடும் அழகியைக் கொண்டு செல்லப் பல்லக்கு வேண்டுமா? பாதுகாவலுக்கு ஆப்பிரிக்க அடிமைப் பையன் வேண்டுமா?’ என்று தன் வியாபாரத் புத்தியைக் காட்டத் தொடங்கினான்.

உமார், இவனுடைய பேச்சுக்கெல்லாம் காது கொடுக்காமல் தன் பின்னால் வேறொரு குதிரையில் தொடர்ந்து வந்த வேலைக்காரனைக் கீழே இறங்கச் சொன்னான். அவன் இறங்கியதும், அந்தக் குதிரையின் மேல் அயீஷா ஏறிக் கொண்டாள். சேணத்தில் உட்கார்ந்த பிறகுதான் பிழைத்தோம்